top of page
mediatalks001

'சில நொடிகளில்' - விமர்சனம் படத்தின் 'ஹை லைட்டே' யாரும் யூகிக்க முடியாத கிளைமாஸ்க்தான் !


cast ; Richard Rishi,Punnagai Poo Gheetha,Yashika Aanand,Lydia Danistan

crew; Director: Vinay Bharadwaj,Producer: Punnagai Poo Gheetha

Creative Producer: Sharmiela Mandre,Cinematographer: Abhimanyu Sadanandan

Editor: Shaijal PV,Music Composers: Masala Coffee, Bjorn Surrao, Darshana KT,

Stacatto & Rohit Matt


தன் மனைவி புன்னகை பூ கீதாவுடன் லண்டனில் டாக்டராக வாழ்ந்து வருகிறார் ரிச்சர்ட் ரிஷி.

இந்நிலையில் சிகிச்சைக்கு வரும் மாடல் அழகியான யாஷிகா ஆனந்தின் அழகில் ரிச்சர்ட் ரிஷி மயங்க இருவரது கள்ள தொடர்பில் காதல் உருவாகிறது .

இந்நேரத்தில், ரிச்சர்ட் ரிஷியுடன் யாஷிகா ஆனந்த் உல்லாசமாக இருக்கும் போது போதை தலைக்கேறி திடீரென இறந்து விடுகிறார்.

அந்த நேரத்தில் மனைவியான புன்னகை பூ கீதா வீட்டுக்கு வரும் போது யாஷிகா ஆனந்தின் உடலை மரப்பெட்டிக்குள் மறைத்து பின்பு யாருக்கும் தெரியாமல் ரிச்சர்ட் ரிஷி புதைத்து விடுகிறார்.

மனக்குழப்பத்தில் இருக்கும் ரிச்சர்ட் ரிஷியிடம் யாஷிகாஆனந்தின் தோழி உண்மையை தெரிந்துக்கொண்டு ரிச்சர்ட் ரிஷியை மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார்.

யாஷிகாஆனந்தின் தோழியின் மிரட்டலால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் ரிச்சர்ட் ரிஷி தன் மனைவி புன்னகை பூ கீதாவிடம் நடந்த உண்மைகளை சொல்கிறார் .

முடிவில் ரிச்சர்ட் ரிஷியின் செயல்களால் அதிர்ச்சியடையும் புன்னகை பூ கீதா தன் கணவனை காப்பாற்றினாரா ?

ரிச்சர்ட் ரிஷிக்கு மட்டுமே தெரிந்த யாஷிகாஆனந்தின் மரணம் பணத்திற்காக மிரட்டும் யாஷிகா ஆனந்தின் தோழிக்கு எப்படி தெரிந்தது ? என்பதை யாருமே எதிர்பார்க்காத திருப்புமுனையான க்ளைமாஸ்க் கொண்ட படம்தான் 'சில நொடிகளில்'

லண்டனில் பணிபுரியும் டாக்டராக ரிச்சர்ட் ரிஷி கதாபாத்திரத்துடன் இணைந்து பல பரிணாமங்களில் காதல் பயம், பதட்டம், குற்றவுணர்வு என உணர்வுபூர்வமான நடிப்பில் திறமையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் ரிஷியின் மனைவியாக நடிக்கும் புன்னகை பூ கீதா கதையுடன் இணைந்து ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் அனுபவ நடிகையாக முத்திரை பதிக்கிறார் .

ரிச்சர்ட் ரிஷியின் காதலியாக நடிக்கும் யாஷிகா ஆனந்த் இளமை துள்ளலுடன் கவர்ச்சியாக இளசுகளை ஏங்க வைக்கிறார் .

படத்தில் நடித்த மற்ற கலைஞர்கள் நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளனர் .

ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன், லண்டன் அழகை இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். லண்டன் நகரத்தின் குளிர்ச்சியுடன் மிக நேர்த்தியாக படம் பிடித்திருப்பது பாராட்டும்படி உள்ளது

மசாலா காஃபி, பிஜோன் சுர்ரரோ, தர்ஷன்.கே.டி, ஸ்டக்கட்டோ மற்றும் ரோகித் மேட் என ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர் மெலடியுடன் பாடல்கள் அனைத்தும் இனிமை. பின்னணி இசை கதைக்கேற்றபடி பயணித்துள்ளது .


லண்டனில் பணிபுரியும் டாக்டருக்கு கள்ளக்காதலால் உல்லாசமாக இருக்கும்போது எதிர்பாராமல் நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் அதை தொடர்ந்து அவர் எதிர்கொள்ளும் கதையை விறு விறுப்பாக சஸ்பென்ஸான திரைக்கதை அமைப்பில் படத்தின் முடிவில் சில நிமிடங்களில் யாரும் யூகிக்க முடியாத திருப்பமான காட்சியுடன் அனைவரும் ரசிக்க கூடிய திரில்லர் படமாக பாராட்டும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் வினய் பரத்வாஜ்

ரேட்டிங் ; 3.5 / 5


'சில நொடிகளில்' எதிர்பார்க்காத கிளைமாஸ்க் கொண்ட சிறந்த படைப்பு !

Comments


bottom of page