top of page

'குய்கோ' விமர்சனம் நல்ல கதையம்சம் கொண்ட தரமான படைப்பு



கணக்கு மாஸ்டராக மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் விதார்த்,,,,,வட்டிக்கு பணம் கொடுக்கும் வேலையுடன் பிணம் வைக்கும் ஐஸ் பெட்டியையும் வாடகைக்கு விடும் முத்துகுமாரிடம் ஐ பி எல் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்னைக்கு செல்ல பணம் கேட்க செல்லும்போது,,,, அழகுமலையில் வாழும் யோகிபாபுவின் அம்மா இறந்துவிடுகிறார்.

யோகிபாபு அம்மாவின் உடலை வைக்க முத்துகுமாரிடம் ஐஸ் பெட்டியை வாங்க இளவரசு அங்கு வர ஐஸ் பெட்டியுடன் விதார்த்தை அழகுமலைக்கு அனுப்புகிறார் முத்துக்குமார் .

இந்நிலையில் யோகிபாபு வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும்என்பதால் பிணத்தை ஐஸ் பெட்டியில் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.

விதார்த் ஐஸ் பெட்டியில் பிணத்தை வைத்து சுவிட்ச் போடும்போது ஊர் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்க ,,,, ஊர் மக்கள் விதார்த்தை மின் கம்பத்தில் ஏறி சரி செய்ய சொல்கிறார்கள்.

விதார்த்தும் மின் கம்பத்தில் ஏறி சரி செய்து கொடுக்கிறார். மின்சாரம் வந்ததும் ஊர் மக்கள் அனைவரும் நீ சென்றதும் மின்சாரம் நின்று விட்டால் ஊரில் பிரச்சனை ஏற்படும் அதனால் இங்கே இருந்து எல்லாம் முடிந்த பிறகு கிளம்பு என சொல்லும் நிலையில்,,,, ஒரு கட்டத்தில் விதார்த்திடம் இளவரசு மாடு மேய்க்கும் யோகி பாபு ஒரு பெண்ணை காதலித்ததாகவும் யோகிபாபு மாடு மேய்ப்பதால் பெண் வீட்டார் பெண் கொடுக்க மறுத்ததால் துபாய்க்கு வேலைக்கு சென்று .அங்கு ராஜாவின் ஒட்டகத்தை மேய்ப்பவராக இருப்பதால் செல்வ செழிப்பாக இருக்கிறார் என யோகிபாபுவின் கதையை சொல்லி அவர் வரும்வரை நீ இருந்து அனைத்தும் முடிந்தவுடன் கிளம்பு கண்டிப்புடன் சொல்கிறார்.


முடிவில் யோகிபாபு துபாயில் இருந்து வந்து தாயின் இறுதி சடங்கில் கலந்து கொண்டாரா ?

விதார்த் தொடர்ந்து அந்த ஊரில் இருந்ததால் அவரது நிலை என்ன ?


பண வசதியுடன் மீண்டும் ஊருக்கு வந்த யோகிபாபு தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா ?என்பதை சொல்லும் படம்தான் 'குய்கோ'




துபாயில் இருந்து ஊருக்கு வரும் கதையின் நாயகன் யோகிபாபு இயல்பான காமெடி நடிப்பால் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறார். குறிப்பாக வடிவேலு சம்பந்தப்பட்ட வசனங்களில் சிரிப்பில் தியேட்டரே அதிர்கிறது !


மற்றொரு நாயகனாக விதார்த் வழக்கமான நடிப்பில் சிறப்பாக நடிக்கிறார் .


முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இளவரசு , யோகிபாபுவின் காதலியாக வரும் துர்கா , விதார்த் காதலிக்கும் பெண்ணாக ஸ்ரீபிரியங்கா ,வினோதினி என நடித்த மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .


அந்தோணி தாசன் இசையில் பாடல்கள் அனைத்தும் கிராமிய மணம் ,,, கதைக்கேற்றபடி பின்னணி இசை ரசிக்க வைக்கிறது .


ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் !


ஒரு இயல்பான கதையை கிராம பின்னணியுடன் வழக்கமான சினிமா முலாம் பூசாமல் நேர்த்தியான தெளிவான திரைக்கதை அமைப்பில் ரசிக்கும்படியான காமெடி கலந்த வசனங்களுடன் கிராம மக்களின் இயல்பான வாழ்வியலை படம் பார்க்கும் அனைவரும் பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அருள் செழியன் .


வில்லத்தனம் ,,பழிக்கு பழி,,,ரத்த களரி எதுவும் இல்லாத நல்ல கதையம்சம் கொண்ட தரமான படைப்பு ' குய்கோ '

ரேட்டிங் ; 4 / 5


Comentarios


bottom of page