top of page

'சூரகன்' விமர்சனம் சூராதி சூரன் இந்த 'சூரகன்'

mediatalks001

காவல் அதிகாரியான கார்த்திகேயனுக்கு ஒரு விபத்தினால் பார்வையில்குறைபாடு ஏற்பட்டு தலைகீழ் உருவமாக அனைத்தும் தெரிய ஆரம்பிக்கிறது .

இச் சூழ்நிலையில் பணியின் போது இவர் எதிரிகளை சுடும்போது எதிர்பாராமல் தவறுதலாக ஒரு அப்பாவி பெண்ணை சுட்டு விடுகிறார்,

இதனால் இவரின் வேலையில் இருந்து தற்காலிக பணி நீக்கம் மேலிடத்தால் செய்யப் படுகிறார்.

ஒருநாள் இவர் வண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது ரத்த வெள்ளத்தில் ஒருபெண் அடிபட்டு கிடக்க,,, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனையில் கார்த்திகேயன் சேர்க்கிறார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவர் இறந்துவிடுகிறார். இந்த மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டகார்த்திகேயன் இதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முயலும் போது இறந்த பெண் பணக்காரர் நிழல்கள் ரவியின் பேத்தி என்பதை அறிந்து நிழல்கள் ரவியின் அனுமதியுடன் அதற்கான புலனாய்வில் தகவல்களை சேகரிக்கிறார்.

இந்த கேஸை பற்றி விசாரிக்கும் சமயத்தில் அந்தப்பெண்ணுடன் இருந்த மற்ற இரு பெண்களும் கொல்லப்படுகிறார்கள்.

முடிவில் கொலையான மூன்று பெண்களின் இறப்பிற்கும் கொலைகளை செய்த கொலையாளிக்கும் என்ன தொடர்பு ?

இந்த கொலைகளை அந்த கொலைகாரன் செய்வதற்கான காரணம் என்ன என்பதை கதையின் நாயகன் கார்த்திகேயன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் 'சூரகன்'

கதையின் நாயகனாக கார்த்திகேயன் துடி துடிப்புள்ள போலீஸ் அதிகாரியாக இளமை துள்ளலுடன் காதல் நாயகனாக ,,,,புலனாய்வில் துப்பறியும்போது வில்லனின் அடியாட்களை பந்தாடும்போது அதிரடி ஆக்ரோஷ நாயகனாக அறிமுக நடிகரை போல இல்லாமல் அனுபவ நடிகராக முத்திரை பதிக்கிறார் .

நாயகி சுபிக்க்ஷா கிருஷ்ணன் காட்சிகள் குறைவாக இருந்தாலும் கதைக்கேற்றபடி இயல்பாக நடிக்கிறார் .

நிழல்கள் ரவி,சுரேஷ் மேனன் ,மன்சூர் அலிகான்,வின்சென்ட் அசோகன், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ,பாண்டியராஜன் ,வினோதினி என நடித்த நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .


மாஸ்டர் ஸ்ரீதரின் நடன அமைப்பும் - டேன்சர் மணியின் ஆக்க்ஷனும் சிறப்பு.


ஜேசன் வில்லியம்ஸ் & சதீஷ் கீதா குமார் ஒளிப்பதிவும் , அச்சு ராஜாமணி பாடல் & பின்னணி இசை படத்திற்கு பக்க பலம் .


தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி அப்பாவி பெண்களின் கொலையை புலனாய்வில் துப்பறியும்போது எதிர்கொள்ளும் சம்பவங்களை அதிரடியாக சமாளித்து வெற்றி பெறுவதை மையமாக வைத்து விறு விறுப்பான திரைக்கதை அமைப்புடன் திரில்லர் பட ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அனைவரும் ரசிக்கும் அதிரடிஆக்க்ஷன் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் சதீஷ் கீதா குமார்.


ரேட்டிங் ; 3 / 5


Comments


bottom of page