சிறு வயதில் கொலை செய்துவிட்டு சிறை செல்லும் பாலாஜி முருகதாஸும் ரெடின் கிங்ஸ்லியும் சிறையில் பல வருடங்கள் தண்டனை அனுபவித்து விட்டு பின் விடுதலையாகி சிறையிலிருந்து வெளியே வருகிறார்கள்.
வெளியே வந்ததும் உழைத்து வாழ நினைத்து வேலை தேடி அலைகிறார்கள். ஆனால் யாரும் வேலை கொடுக்கவில்லை .அவர்களுக்கு வேலை கிடைக்காததால், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட முடிவு செய்து
பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய மைம் கோபியிடம் வேலைக்கு சேருகிறார்கள்.
அதன்படி, மைம் கோபி பேச்சை கேட்டு வால்வோ பேருந்து ஒன்றை கடத்த திட்டமிடுகிறார்கள்.
அந்த பேருந்தில் 40 குழந்தைகளும், நாயகிகளான மஹானா சஞ்சீவும் மற்றும் காயத்ரி ரெமாவும் இருக்கிறார்கள்.
அவர்களை சேர்த்து கடத்தும் பாலாஜி முருகதாஸ் அவர்களை வைத்து பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார்.
ஆனால், அந்த குழந்தைகள் ஆதரவற்றவர்கள் என்பதால், அவர்களுடைய திட்டம் தோல்வியடைகிறது. இதனால், மஹானா சஞ்சீவ் மற்றும் காயத்ரிரெமா இருவரையும் பாலாஜி முருகதாஸும் ரெடின் கிங்ஸ்லியும் காதலிக்க தொடங்குகிறார்கள்.
இந்நேரத்தில் பாலாஜி முருகதாஸும் ரெடின் கிங்ஸ்லியும் காதலிக்கும் பெண்கள் மலேசியா நாட்டைச் சேர்ந்த பணக்கார வீட்டு பெண்கள் என்பதால், அவர்களை கடத்தி கேட்கின்ற பணம் கிடைத்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என திட்டம் போடுகிறார் மைம் கோபி .
முடிவில் நாயகிகளை கடத்தி பணம் பறிக்க திட்டம் போட்ட மைம் கோபியின் திட்டம் வெற்றி பெற்றதா?
பாலாஜி முருகதாஸும் ரெடின் கிங்ஸ்லியும் காதலித்த பெண்களுடன் இல் வாழ்க்கையில் இணைந்தார்களா ? என்பதை சொல்லும் படம்தான் ‘வா வரலாம் வா’
நாயகனாக அறிமுகமாகியுள்ள பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் காதல் நாயகனாக ஆட்டம் பாட்டத்துடன் ஆக்ஷனில் அதிரடி நாயகனாக நடிப்பில் அசத்துகிறார் .
கதாநாயகிகளான மஹானா சஞ்சீவ் மற்றும் காயத்ரி ரெமா கதைக்கேற்றபடி நடிப்பதுடன் பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடித்து இளசுகளை ஏங்க வைக்கிறார்கள்
வழக்கமான பாணியில் காமெடியில் அசத்தும் ரெடின் கிங்ஸ்லி
வில்லனாக நடித்திருக்கும் மைக் கோபி , பல விதமான கெட்டப்புகளில் குற்ற செயல்களில் ஈடுபடும் அவரது இயல்பான நடிப்பு படத்திற்கு பலம்
சிங்கம் புலி, தீபா ஆகியோரது கூட்டணி காமெடியுடன் சரவண சுப்பையா, கிரேன் மனோகர், வையாபுரி என மற்ற வேடங்களில் நடித்த நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
தேனிசை தென்றால் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம் .
கார்த்திக் ராஜா ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்
திருட்டை மையமாக கொண்ட கதையுடன் ஆக்ஷனுடன் சேர்ந்த சஸ்பென்ஸ் திரில்லராக ரசிகர்களை ரசிக்க வைக்கும் காமெடியுடன் அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய முழுமையான பொழுதுபோக்கு படமாக எல்.ஜி.ரவிசந்தர் கதை, திரைக்கதை, வசனம் எழுத, அவருடன் இணைந்து தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் இயக்கியுள்ளார்.
ரேட்டிங் ; 3.5 / 5
Comments