ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மேல் தீவிர பக்தி கொண்ட பிராமணரான அச்யுத் குமாருக்கு மகளாக பிறந்தவர் நயன்தாரா.
பெருமாள் கோவிலில் உள்ள மடப்பள்ளியில் பிரசாதம் செய்யும் இடத்தில் அச்யுத் குமார் வேலைசெய்வதால் அதனை பார்த்து வளரும் நயன்தாரா சிறு வயதில் இருந்தே இந்திய அளவில் புகழ் பெற்ற சமையல் கலை நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
இந்நிலையில் நயன்தாரா சமையல் கலை நிபுணர் படிப்பை படிக்க ஆசைப்படும்போது தங்களது குடும்பம் ஆச்சாரமானது என்பதால் அசைவ உணவு சாப்பிட நேரிடும் என்ற காரணத்திற்காக நயன்தாராவின் தந்தை அவரின் ஆசைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
தந்தையின் தடையை மீறி அவருக்கு தெரியாமல் கல்லூரியில் சமையல் கலை படிப்பு படித்து வரும் நயன்தாராவை பார்க்க கல்லூரிக்கு செல்லும் அச்யுத் குமார்,,,, தான் வெளியூர் செல்வதால் நயன்தாராவிடம் வீட்டு சாவியை கொடுக்க செல்லும் பொழுது சமையல் வகுப்பில் நயன்தாரா அசைவ உணவு சாப்பிடுவதை பார்த்துவிடுகிறார்.
இதனால் மனமுடைந்த நயன்தாராவின் தந்தை உடனே அவருக்கு திருமண ஏற்பாடு செய்கிறார்.
தன் லட்சிய கனவான புகழ் பெற்ற சமையல் கலை நிபுணர் ஆக திருமணம் செய்து கொள்ளாமல் பாட்டி சச்சுவின் உதவியுடன் ஜெய்யுடன் வெளியேறுகிறார் நயன்தாரா .
பல்வேறு தடைகளை மீறி சமையல் கலையில் புகழ் பெற்று விளங்கும் சத்யராஜ் குழுவுடன் பெரிய நட்சத்திர ஓட்டலில் வேலைக்கு சேர்கிறார் . வேலையின்போது ஏற்படும் எதிர்பாராத விபத்தினால் உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்பினால் அவரால் சுவையாக சமைக்கவே முடியாது என்ற நிலை ஏற்படுகிறது.
முடிவில் புகழ் பெற்ற சமையல் கலை நிபுணராக ஆசைப்பட்ட நயன்தாராவின் கனவு நிறைவேறியதா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'அன்னபூரணி'
கதையின் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரில்லர் ஆக்ஷன் இல்லாத கதையில் அன்னபூரணி கதாபாத்திரத்தில் உணர்வுபூர்வமான நடிப்பில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
நயன்தாராவின் இணையாக ஜெய் ,தந்தையாக நடிக்கும் அச்யுத் குமார், சமையல் கலை நிபுணராக நடிக்கும் சத்யராஜ் ,கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, கார்த்திக் குமார்,சுரேஷ் சக்ரவர்த்தி, ரேணுகா, குமாரி சச்சு ,பிக் பாஸ் பூர்ணிமா என நடித்த கலைஞர்கள் நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளனர் .
தமன்.எஸ் இசையில் பாடல்களும் , பின்னணி இசையும் கதைக்கு பக்க பலம் .
சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .
சைவ குடும்பத்தில் பிறந்த பிராமண பெண்,,, படிப்பிற்காக அசைவம் சாப்பிடுவதை எதிர்க்கும் பெற்றோர் இதனை மையமாக கொண்ட கதையுடன் தன் லட்சிய கனவிற்காக ஒரு பெண் எதிர்கொள்ளும் சம்பவங்களை விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் அனைத்து தரப்பினரும் ரசிக்க கூடிய படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா.
ரேட்டிங் ; 3 / 5
Comments