top of page

'கட்டில்' - பட விமர்சனம்


தன் அப்பா ,தாத்தா என மூன்று தலைமுறையாக அவர்கள் வாழ்ந்த வீட்டில் கர்ப்பிணி மனைவி சிருஷ்டி டாங்கே, தாய் கீதா கைலாசம் மற்றும் சிறுவன் நிதிஷுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் நாயகன் கணேஷ் பாபு

250 வருட பழமை வாய்ந்த பாரம்பரிய கட்டில் ஓன்று கணேஷ் பாபு வீட்டில் இருக்க இந்த கட்டிலை தன் உயிருக்கு நிகராக வைத்து இருக்கிறார் கணேஷ் பாபு.

வேறு இடங்களில் வாழும் கணேஷ் பாபுவின் சகோதர, சகோதரிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு அவர் வாழும் வீட்டை விற்க நினைக்கிறார்கள். வீட்டை வாங்கும் நபர் வீட்டுடன் சேர்த்து கட்டிலையும் வாங்க நினைக்கிறார் .

பணத்திற்கு ஆசைப்படாத கணேஷ்பாபு கட்டிலை தர மறுக்கிறார்.

ஒரு கட்டத்தில் கணேஷ்பாபுவின் அனுமதியுடன் சகோதர, சகோதரிகள் வீட்டை விற்கிறார்கள்.

இதில் வரும் பணத்தை வைத்து கட்டில் வைக்கும்அளவிற்கு பெரிய வீடு வாங்க நினைக்கிறார் கணேஷ் பாபு . ஆனால், அதற்கு தகுந்தாற்போல் வீடு கிடைக்கவில்லை

வீட்டை வாங்கியவரின் தொல்லை தாங்க முடியாத கணேஷ்பாபு கட்டிலை பாரம்பரிய பொருட்களை பாதுகாக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் இடத்தில் தற்காலிகமாக வைத்து விட்டு குடும்பத்துடன் புதிய வீட்டிற்கு வாடகைக்கு செல்கிறார்.

முடிவில் கணேஷ்பாபு கட்டிலை வைப்பதற்காக சொந்த வீடு வாங்கினாரா? நிறைமாத கர்ப்பிணியான சிருஷ்டி டாங்கேவின் நிலை என்ன ?

என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்தான் 'கட்டில்'

கதையின் நாயகனாக நடிக்கும் கணேஷ்பாபு தாத்தா, தந்தை, மகன் என மூன்று தலைமுறை கதாபாத்திரங்களாக அமைதியான உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நாயகியாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே கர்ப்பிணி பெண்ணாக இயல்பான நடிப்பில் சிறப்பாக நடிக்கிறார் .

சிறப்பு தோற்றத்தில் வரும் விதார்த் , நாயகியாக நடிக்கும் கன்னிகா சினேகன் , கீதா கைலாசம் , இந்திரா சௌந்தர்ராஜன் ,சம்பத்ராம் ,காதல் கந்தாஸ் , மெட்டிஒலி சாந்தி , செம்மலர் அன்னம் , ஓவியர் ஷியாம் என நடித்த நடிகர்கள் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்களும் , பின்னணி இசையும் கதைக்கு தகுந்தாற்போல பயணிக்கிறது .


wide angle ரவிசங்கரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக உள்ளது .


250 வருட பழமை வாய்ந்த பாரம்பரிய கட்டிலை மையப்படுத்திய கதையுடன் நாயகனாக நடித்து படத்தை இயக்கி இருக்கிறார் கணேஷ் பாபு . ஆரம்பத்தில் விறு விறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் செல்லும் திரைக்கதையில் இடைவேளைக்கு பின் சில காட்சிகளில் ஏற்படும் தொய்வுகளால் கதையின் வேகம் குறைகிறது . இருந்தாலும் பழமை வாய்ந்த கட்டிலின் மகத்துவத்தை எளிமையாக கதையில் சொல்வதோடு இயல்பான வாழ்வின் தன்மையை உணர்வுபூர்வமான முடிவுடன் படத்தை இயக்கியுள்ளார் கணேஷ் பாபு.


ரேட்டிங் ; 3.5 / 5


bottom of page