top of page
mediatalks001

‘ஃபைட் கிளப்’ - பட விமர்சனம்!


கால் பந்தில் சிறந்து விளங்கும் பகுதியில் வாழும் இளைஞர்களையும், சிறுவர்களையும் சிறந்த வீரர்களாக உருவாக்க ஆசைப்படுகிறார் குத்துச்சண்டை வீரராக இருக்கும் கார்த்திகேயன் சந்தானம் .

கார்த்திகேயன் சந்தானத்தின் தம்பி அவினாஷ் நண்பன் சங்கர்தாஸுடன் சேர்ந்து போதைப்பொருளான கஞ்சா விற்கும் தொழில் செய்கிறார்.

இதனை கார்த்திகேயன் சந்தானம் கண்டிக்கும்போதுகஞ்சா தொழிலில் ஈடுபடும் கார்த்திகேயன் சந்தானத்தின் தம்பி அவினாஷ், சங்கர் தாஸுடன் சேர்ந்து கார்த்திகேயன் சந்தானத்தை கொலை செய்து விடுகிறார்.

இந்த பழியை ஏற்றுக் கொண்டுசிறை செல்ல சொல்லும் அவினாஷை,,,சங்கர்தாஸ் சிறையில் இருந்து உடனே பெயிலில் வெளியில் எடுப்பதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவிடுகிறார்.

ஒருபக்கம் அவினாஷ் சிறைக்கு போக, மறுபக்கம் சங்கர்தாஸ் அரசியலில் பெரும்புள்ளியாக வளர்ந்து அந்த பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.

சிறுவனாக இருக்கும் நாயகன் விஜய்குமார் இளைஞனாக வளர்ந்த பின் கார்த்திகேயன் சந்தானத்தின் ஆசைப்படி கால்பந்தில் சிறந்த வீரராக விளங்குகிறார் .

இந்நேரத்தில் சங்கர் தாஸால் ஏமாற்றப்பட்ட அவினாஷ் சில வருடங்கள் ஜெயிலில் இருந்து வெளியே வந்தவுடன் தன் அண்ணனை கொலை செய்ய காரணமாக இருந்த சங்கர்தாஸை சாமர்த்தியமாக நாயகன் விஜயகுமாரை வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறார்.

முடிவில் திட்டமிட்டபடி விஜய்குமாரை வைத்து சங்கர்தாஸை அவினாஷ் பழி தீர்த்தாரா ?

அவினாஷின் சதித்திட்டத்தை அறிந்து கொண்ட விஜய்குமார் இறுதியில் என்ன செய்தார் ? என்பதை சொல்லும் படம்தான் ‘ஃபைட் கிளப்’

’உறியடி’ படத்தில் நாயகனாக அறிமுகமான விஜய் குமார் துடிப்பான இளைஞராக மீண்டும் அதே ஆக்ரோஷத்தோடு களம் இறங்கி ஆக்க்ஷன் காட்சிகளில் கடுமையாக உழைத்து அதிரடி ஆக்க்ஷன் நாயகனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் மோனிஷா மோகன் , குத்துச்சண்டை வீரராக நடிக்கும் கார்த்திகேயன் சந்தானம் , வில்லனாக நடிக்கும் சங்கர் தாஸ், அவினாஷ் , இயக்குனர் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் ,சரவண வேல் ,ஆதிரா பாண்டி லஷ்மி ,பிச்சைக்காரன் மூர்த்தி ஆகியோருடன்,,,,, நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

ஒளிப்பதிவாளர் பிரிட்டோவின் ஒளிப்பதிவும் ,,இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்திற்கு பக்க பலம் .

வட சென்னை கதையை வைத்து போதைப்பொருட்களுடன் கலந்த அரசியல் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிப்பதை விறு விறுப்பான திரைக்கதை அமைப்புடன் வித்தியாசமான முறையில் சண்டைக்காட்சிகளை காட்சிப்படுத்தி அனைவரும் ரசிக்கும் ஆக்க்ஷன் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத்.

ரேட்டிங் ; 3.5 / 5


ஆக்க்ஷன் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் ‘ஃபைட் கிளப்’

.


Comments


bottom of page