மயில் சாமியின் மகளான அம்மு அபிராமிக்கு திருமணத்திற்காக மணமகன் பார்க்கும்போது சில காரணங்களால் திருமணம் தடைப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வரனையும் ஏதாவது காரணம் சொல்லி தட்டி கழிக்கிறார் மயில் சாமியின் மனைவியான மௌனிகா .
திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஷாலின் சோயா, லிவிங் டூ கெதர் முறையில் ஓரு ஆணுடன் வாழ்ந்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள காதலன் வற்புறுத்த இருவருக்குள்ளும் பிரச்சனையாகிறது .
காதலனால் கர்ப்பமடைந்த கீர்த்தி பாண்டியன் நான்கு மாத கருவை கலைக்க முடியாமல் திண்டாட ,, கேரளாவில் அதற்குண்டான வழி கிடைக்க கருவை கலைக்க அங்கு செல்கிறார் .
விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு வரும் வித்யா பிரதீப் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்.
வழக்கு நடைபெறும் நிலையில் நடத்தையை பற்றி கணவன் பொய்யாக சொல்லுவதால் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாமல் விவாகரத்து பெறும் வித்யா பிரதீப் தனக்காக வாதிட்ட வக்கிலையே காதலிக்கிறார் .
இப்படி நான்கு பெண்களும் ஒவ்வொரு பிரச்சனையோடு வாழ்ந்து வரும் நிலையில், இவர்கள் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்கள், இறுதியில் இவர்களது வாழ்க்கை பயணம் முடியும்போது யாருமே யூகிக்க முடியாத திருப்பு முனையான முடிவு என்ன என்பதை சொல்லும் சொல்லும் படம்தான் 'கண்ணகி'
அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் சோயா என ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பிரச்சனையான கதைக்களத்தில் கதாபாத்திரத்திரத்துடன் இணைந்து நான்கு நடிகைகளும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
யஷ்வந்த் கிஷோர், வெற்றி, மயில்சாமி, ஆதேஷ் சுதாகர், மெளனிகா,கோதண்டம் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் மிக இயல்பான நடித்துள்ளனர் .
ராம்ஜியின் ஒளிப்பதிவும் ,ஷான் ரகுமானின் இசையும் படத்திற்கு பக்க பலம் .
நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக குற்றங்களை மையப்படுத்தி சமூகம் சார்ந்த சம்பவங்களை திரைக்கதையாக அமைத்து ஆரம்பத்தில் நான்கு பெண்களின் வாழ்க்கையை இயல்பாக சொல்வதுடன் இடைவேளைக்கு பின் அவர்களுடைய பிரச்சனைகளுடன் சேர்ந்த வலிகளை கொண்ட திரைக்கதையுடன் படத்தின் க்ளைமாக்ஸில் வரும் எதிர்பார்க்காத திருப்புமுனையுடன் ரசிகர்கள் பாராட்டி கைதட்டும் விதமாக புதுமையாக படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் யஷ்வந்த் கிஷோர்,
வலிகள் நிறைந்த பெண்களின் வாழ்வுரிமைக்காக போராடும் ‘கண்ணகி’
ரேட்டிங் ; 3.5 / 5
Comentários