பஞ்சாப்பில் லல்டு கிராமத்தில் வசிக்கும் மூன்று நண்பர்கள் இவர்களுடன் டாப்ஸி பண்ணு நால்வரும் பொருளாதார பிரச்சனையில் இருந்து மீள பணம் சம்பாதிக்க இங்கிலாந்து செல்லத் திட்டமிடுகின்றனர்.
ஆனால், அவர்களிடம் அதற்கான தகுதி இல்லாததால் அவர்களுக்கு விசா மறுக்கப்படுகிறது. இதனால், போலியான முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறும் டாப்ஸிபண்ணுவையும் அவரது நண்பர்களையும் முன்னாள் ராணுவ வீரரான ஷாருக்கான், டங்கி வழி என்று சொல்லக்கூடிய சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்து நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
விசா இல்லாமல் திருட்டுத்தனமாக பல நாடுகளை கடந்து இங்கிலாந்து செல்வதுதான் டங்கி வழி.
ஆங்கிலத்தில் டாங்கி… தமிழில் கழுதை செல்லும் பாதை என்பதை விளக்கும் வார்த்தைதான் இந்த டங்கி...
முடிவில் விசா இல்லாமல் திருட்டுத்தனமாக செல்லும்போது அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் என்ன?
தடைகளை தகர்த்து அவர்கள் வெற்றிகரமாக இங்கிலாந்து நாட்டுக்கு சென்றார்களா?
இங்கிலாந்து நாட்டுக்கு சென்றவுடன் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ‘டங்கி’
முன்னாள் ராணுவ வீரராக இளைஞர் கெட்டப்பிலும்,,, 25 வருடங்கள் கழித்து டாப்ஸி பண்ணுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும்போது வயதான கெட்டப்பிலும் நடிக்கும் ஷாருக்கான், இரண்டு கெட்டப்புகளுக்குமான வித்தியாசத்தை உடல் மொழியில் மிக சாதாரணமாக நரை முடி , தாடியுடன் வயதானவராகவும், மீசை , தாடி இல்லாமல் இளைஞராகவும் இயல்பாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், உணர்ச்சிமயமான செண்டிமெண்ட் காட்சிகளிலும் வழக்கம்போல அசத்துகிறார் .
டாப்ஸி பண்ணுவின் நடிப்பில் வயதான - இளைய என இரண்டு கெட்டப்புகள். ஷாருக்கானிடம் மல்யுத்தப் பயிற்சி எடுக்கும் காட்சிகளிலும் ,ஷாருக்கானுடனான காதல் காட்சிகளிலும் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்
இங்கிலாந்தில் கணவரால் கொடுமைப்படுத்தப்படும் தனது காதலியை மீட்பதற்காக இங்கிலாந்து செல்ல முயற்சிக்கும் சுகி, அது முடியாமல் போக காதலிக்கு நேர்ந்த சோகத்தால் தீக் குளித்து இறந்து போவது கலங்க வைக்கும் காட்சிகளில் ஒன்று .
டாப்ஸி பண்ணுவின் நண்பர்களாக நடிக்கும் நடிகர்களுடன் ஆங்கிலஆசிரியராக வரும் பொமன் இராணியின் நடிப்பும் சிறப்பு .
சி.கே.முரளீதரன், மனுஷ் நந்தன், அமித் ராய் மற்றும் குமார் பங்கஜ் ஆகியோரது சிறப்பான ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .
இசையமைப்பாளர் ப்ரீதமின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் . அமன் பந்தின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலம் .
படத்தின் ஆரம்பத்தில் நகைச்சுவையாக செல்லும் கதையில் இடைவேளைக்கு பின் சட்டவிரோதமாக ஒரு நாட்டுக்கு செல்லும் போது எப்படிப்பட்ட இடையூறுகளை கடந்து செல்வார்கள் என்பதை சொல்லும்போது வழக்கமான சினிமாத் தனமான திரைக்கதையுடன் கதை பயணித்தாலும்,,, நட்பு, காதல், பாசம், குடும்ப உறவுகள் என அனைத்து உணர்வுகளுடன் சட்டவிரோதமாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு பயணம் மேற்கொள்தை சில உண்மை புகைப்படங்களை காட்டி படம் பார்க்கும் மக்களுக்கு எச்சரித்து நகைச்சுவை வசனங்களுடன் கிங் கான் ரசிகர்கள் கொண்டாடும் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி.
ஷாருக்கானின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த ‘டங்கி’
ரேட்டிங் ; 3.5 / 5
Comments