ஒரு இரவு நேரத்தில் நாயகன் அசோக் செல்வன் நண்பர்களுடன் ஜாலியாக குடிபோதையில் இருக்கும்போது இன்ஸ்பெக்டர் மைக்கேல் மற்றும் கான்ஸ்டபிள் மயில் சாமியிடம் சிக்குகிறார்.
அதன் பின் மற்றொருவனை பிடித்து போலீஸ் விசாரிக்கும் போது, அவனது காதல் தோல்வியை கேட்டு பரிதாபப்பட்டு அவனை போலீஸ் விட்டு விட இதனை கேட்ட அசோக் செல்வன், நானும் காதல் தோல்வி அடைந்து இருக்கிறேன் என்னையும் விட்டு விடுங்கள் என கெஞ்சும்போது கான்ஸ்டபிள் மயில்சாமி உன் காதல் தோல்வி கதையை எங்களிடம் சொன்னால் உன்னை விட்டு விடுகிறோம் என சொல்ல ....
பள்ளி பருவம் முதல் கல்லூரி பருவம் வரை அடுக்கடுக்கான காதல் தோல்விகளை சந்தித்து வந்ததாக போலீசிடம் அசோக் செல்வன் கதை சொல்ல ஆரம்பிக்க ...பள்ளியில் படிக்கும் மாணவன் அசோக் செல்வன், சக மாணவி கார்த்திகா முரளிதரனை ஒருதலையாக காதலிக்கிறார்.
ஆனால், அந்த காதலை அவரிடம் சொல்லாமலே பள்ளி படிப்பை முடித்துவிடுவதால் அந்த காதல் தோல்வியடைகிறது.
இளைஞனான பின் கல்லூரியில் படிக்கும் போது ரியாவை காதலிக்கிறார். ரியாவுடனான காதல் ஆரம்பத்தில் ஒருவரையொருவர் காதலித்தாலும் அந்த காதலும் தோல்வியடைகிறது.
இதன்பின் எம் பி ஏ படிக்க முயலும்போது மேகா ஆகாஷ் அசோக் செல்வனை காதலிக்க இருவரும் மனதார காதலிக்க,,,, முடிவில் மேகா ஆகாஷை காதலிக்கும் அசோக் செல்வனின் காதல் வெற்றி பெற்றதா?
வழக்கம் போல் மேகா ஆகாஷின் காதலும் தோல்வியடைந்ததா? என்பதை இயல்பான காமெடியுடன் சொல்லும் படம்தான் ‘சபா நாயகன்’
கதையின் நாயகனாக சிறப்பாக நடித்திருக்கும் அசோக் செல்வன் மூன்று வெவ்வேறு காதல் கதைகளில் நடிப்புடன் காமெடித்தனமான காதல் நாயகனாக ஒவ்வொரு காதல் கதைகளில் ஒவ்வொரு விதத்தில் நடித்து சிறப்பான நடிப்பில் அசத்துகிறார் .
கதையின் நாயகிகளாக கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ் என மூன்று பேரும் அழகுடன் நடிப்பில் போட்டி போடுகின்றனர். இதில் கார்த்திகா முரளிதரனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம்....சாந்தினி சில காதல் காட்சிகள், ஒரு பாடல் என தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார் . படத்திற்கு பக்க பலமாக மேகா ஆகாஷின் ரசிக்க வைக்கும் காதல் கதை .
அசோக் செல்வனின் நண்பர்களாக நடிக்கும் அருண், ஜெயசீலன், ஸ்ரீராம், அனீஷ் ,மைக்கேல் தங்கதுரை, மயில்சாமி என உடன் நடித்த நடிகர்களின் நடிப்பு சிறப்பு .
ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகியோரின் ஒளிப்பதிவும்
லியோன் ஜேம்ஸின் கதைக்கேற்ற இசையும் படத்திற்கு பக்க பலம் !
இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் கொண்டாடும் விதத்தில் வெவேறு அழகான காதல் கதைகளுடன் காதல் தோல்விகளை கூட ரசிக்கும் திரைக்கதை அமைப்புடன் முடிவில் எதிர்ப்பாராத திருப்பத்துடன் இது காதல் தோல்வி கதை அல்ல தோல்வியில் முடிந்த காதல் மீண்டும் மற்றொரு காதலாக ஜாலியாக மாறுவதை நகைச்சுவை கலந்த கதையாக அனைத்து ரசிகர்கள் ரசிக்கும் படி படத்தை இயக்கியுள்ளார் எழுதி இயக்கிய சி.எஸ்.கார்த்திகேயன்.
ரேட்டிங் ; 3.5 / 5
Comments