நண்பர்களான ஷாரிக் ஹசன், அரன், விஜே ஆஷிக் இன்ஜினியரிங் மாணவர்கள். இவர்களில் அரன் 500 மீட்டருக்குள் மொபைலில் பேசுவதை ஒட்டு கேட்கும்படியான ஒரு சாதனத்தை அரன் உருவாக்குகிறார்.
ஒரு கட்டத்தில் கல்லூரியில் அவருடைய கண்டுபிடிப்பு சரியாக வேலை செய்யாததால் கல்லூரி நிர்வாகத்தினால் அவருடைய கண்டுபிடிப்பு நிராகரிக்கப்படுகிறது.
இந்நேரத்தில் நண்பர்களில் ஒருவரது பிறந்த நாளை கொண்டாட மூவரும் காரில் செல்லும்போது மிகப்பெரிய தொழிலதிபரின் மகளை கூலி படையாக செயல்படும் ஒருவன் காரில் கடத்துகிறான் .
மூவரும் காரில் கதறும் பெண்ணை காப்பாற்ற முற்படும்போது தான் கண்டுபிடித்த சாதனத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து போலீசிடம் ஒப்படைக்க நண்பர்களுடன் சேர்ந்து அரன் முடிவு செய்கிறார்.
அரன் கண்டுபிடித்த சாதனம் சரியான முறையில் வேலை செய்ததா?
அந்த சாதனத்தின் மூலம் குற்றவாளிகள் பேசுவதை பதிவு செய்து போலீசிடம் அரன் பதிவான பென் டிரைவை அரன் ஒப்படைத்தாரா ?
கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகளை நண்பர்கள் மூவரும் காப்பாற்றினார்களா? இல்லையா ? என்பதே ’ஜிகிரி தோஸ்த்’ படத்தின் கதை.
நண்பர்களாக நடித்துள்ள ஷாரிக் ஹசன், அரன், விஜே ஆஷிக் மூவரும் கதைக்கேற்றபடி சிறப்பாக நடித்துள்ளனர்
ஷாரிக் ஹசனின் காதலியாக நடிக்கும் அம்மு அபிராமி, பவித்ரா லட்சுமி , வில்லனாக அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் ,,சிவம், கே.பி.ஒய்.சரத், மனோகர் என மற்ற வேடங்களில் நடித்த நடிகர்கள் இயல்பாக நடித்துள்ளனர் .
ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவும் அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையும் படத்திற்கு பக்க பலம் .
கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஜாலியான அரட்டை, காதல், நகைச்சுவை அனைத்தும் கலந்த கதையுடன் அதில் ஒரு மாணவரது கண்டுப்பிடிப்பை கதையுடன் சேர்ந்து பயணிப்பது போல திரைக்கதை அமைத்து,,விறு விறுப்பான அனைவரும் ரசிக்கும்படி குறைந்த பட்ஜெட்டில் தரமான படமாக கதையின் நாயகனாக நடித்து எழுதி இயக்கியிருக்கிறார் அரன்.
Comments