’ஆயிரம் பொற்காசுகள்’ பட விமர்சனம்
- mediatalks001
- Dec 24, 2023
- 2 min read
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குருவாடிப்பட்டி கிராமத்தில் அரசாங்கம் இலவசமாக அளித்த அனைத்து பொருட்களுடன் எந்த வேலைக்கும் செல்லாமல் பக்கத்து வீட்டில் வளர்க்கும் ஆடு, கோழி ஆகியவற்றை திருடி ரேஷன் அரிசியில் சமைத்து சோம்பேறியாக வாழ்கிறார் சரவணன்
அவர் வீட்டு திண்ணையில் வடநாட்டு மனநலம் பாதித்த பேர்வழி ஒருவருக்கும் உணவு கொடுத்து இடம் கொடுக்கிறார்.
இந்நிலையில் சரவணனின் தங்கை ரிந்து ரவி படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் வெட்டியாக இருப்பதாகவும், சொன்ன பேச்சை கேட்காமல் இருப்பதாக கூறி கொஞ்ச நாள் இங்கேயே இருக்கட்டும் என மகன் விதார்த்தை சரவணனிடம் விட்டுச் செல்கிறார்.
மாமன் சரவணனும், மச்சான் விதார்த்தும் தினமும் உண்பது உறங்குவது என்று சென்று கொண்டிருக்க, அந்த கிராமத்தில் கடை வைத்திருக்கும் அருந்ததி நாயரிடம் விதார்த்திற்கு காதல் ஏற்படுகிறது.
இந்நேரத்தில் மத்திய அரசின் கழிப்பறை கட்டும் திட்டத்தில் அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டி போட்டோ எடுத்து ஊர் தலைவருக்கு அனுப்பினால் பன்னிரண்டாயிரம் பணம் தருவதை கேள்விப்பட்டு எதிர் வீட்டில் வசிக்கும் ஹலோ கந்தசாமி கட்டிய கழிப்பறை முன் நின்று போட்டோ எடுத்து ஊர் தலைவர் கர்ண ராஜாவிடம் பணம் பெற்று ஜாலியாக சரவணன் பணத்தை செலவு செய்கிறார் .
ஹலோ கந்தசாமி தான் கட்டிய கழிப்பறைக்கு பணம் வாங்க செல்லும் போது சரவணனின் டிகால்ட்டிதனம் தெரிய வர, ஊர் தலைவர் கர்ண ராஜாவிடம் புகாரளிக்கிறார் ஹலோ கந்தசாமி.
ஊர் தலைவரின் உத்தரவுப்படி சரவணனும், விதார்த்தும் தங்கள் வீட்டில் கழிப்பறை கட்டி பணம் பெற்று அந்த பணத்தை ஹலோ கந்தசாமியிடம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கின்றனர்.
மாமனும் மச்சானும் சேர்ந்து குழி தோண்டுவது சிரமமாக இருக்க பிணம் புதைக்க குழி தோண்டும் தொழிலை செய்யும் ஜார்ஜ் மரியனிடம் இந்த வேலையை ஒப்படைக்கின்றனர்.
ஜார்ஜ் மரியான் குழி தோண்டும் போது பானையில் சோழர் காலத்து ஆயிரம் பொற்காசுகள் புதையல் கிடைக்கிறது. இதனை ஊருக்கு தெரியாமல் சரவணன், விதார்த் மற்றும் ஜார்ஜ் மரியன் ஆகியோர் மூன்று பங்காக பிரித்து எடுத்து கொள்ளலாம் என்று முடிவு செய்கின்றனர்.
இந்த பங்கு பிரிவினையில் ஏற்படும் சண்டையில் சரவணனுக்கும் ஜார்ஜ் மரியனுக்கும் நடக்கும் அடிதடியில் ஜார்ஜ் மரியன் சுயநினைவு இழந்து ஞாபக மறதியால் அவதிப்படுகிறார்.
இதனால் மகிழ்ச்சியாகும் மாமனும் மச்சானும் அந்த ஆயிரம் பொற்காசுகளை தங்களுக்குள் பங்கு போட நினைக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் புதையல் பற்றிய செய்தி ஊர் முழுக்க பரவி ஊரே இருவரிடம் பங்கு கேட்கிறது.
முடிவில் புதையல் பிரட்சனை தெரிந்து தொல்லியல் துறை கிராமத்துக்குள் வருகிறது .
புதையலை அடைய போராடும் கிராம மக்கள் நடத்தும் சண்டையும், துரத்தலும் முடிவுக்கு வந்ததா?
பங்குதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போக ஆயிரம் பொற்காசுகளை இறுதியில் கைப்பற்றியது யார் ? என்பதை நகைச்சுவையாக சொல்லும் படம்தான் 'ஆயிரம் பொற்காசுகள்'
நாயகனாக விதார்த் கதைக்கு பொருத்தமான நடிகராக இயல்பாக நடிப்பை வெளிப்படுத்துகிறார்
விதார்த்தின் தாய்மாமன் வேடத்தில் நடிக்கும் பருத்திவீரன் சரவணன்,நாயகியாக நடிக்கும் அருந்ததி நாயர், அவருடைய அம்மாவாக நடித்திருக்கும் தமிழ் செல்வி , செம்மலர் அன்னம் ,ரிந்து ரவி, மயானத்தில் குழி தோண்டும் வேலை செய்யும் ஜார்ஜ் மரியன், அவருடன் பவன்ராஜ்,
மீன் வியாபாரியாக நடிக்கும் ஹலோ கந்தசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கும் பாரதி கண்ணன், ஊராட்சிமன்ற தலைவராக நடித்திருக்கும் கர்ணராஜா, பொற்கொல்லர் வேடத்தில் நடித்திருக்கும் வெற்றிவேல் ராஜா, பாம்பு பிடிப்பவராக நடித்கும் ஜிந்தா, மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கும் ஜிந்தா கோபி,என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பானு முருகனின் ஒளிப்பதிவும் , இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஸின் இசையும் படத்திற்கு பக்க பலம்.
குழி தோண்டும்போது கிடைக்கும் புதையலை பங்கு கேட்கும் கதையை மையமாக கொண்டு முழுக்க முழுக்க நகைச்சுவையான திரைக்கதை அமைப்புடன் . படத்தில் நடித்த அனைவரும் கதையுடன் பயணித்து இயல்பான நகைச்சுவை மூலம் காமெடி நடிகர்களாக திறமையாக நடிக்க வைத்ததுடன் எளிமையான புதையல் கதையை ரசிகர்கள் சிரித்து மகிழும் காமெடி படமாக படத்தை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் ரவி முருகையா.
ரேட்டிங் ; 3.5 / 5
Comments