கான்சார் என்பது மூன்று பழங்குடி சமூகத்தினர் சேர்ந்து ஆட்சி நடத்தும் பகுதி. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இந்திய சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாமல், தனியாக சட்டம் வகுத்துக்கொண்டு தனி ராஜ்ஜியமாக ஆட்சி நடந்து வருகிறது.
சிறு வயது நண்பர்களான பிரபாஸ் (தேவா) மற்றும் பிரித்விராஜ் சுகுமாறன் (வரதராஜ மன்னார்). கான்சாரில் பிரித்விராஜ் சுகுமாறனின் தந்தையால் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் பிரபாஸ் தன் தாயான ஈஸ்வரி ராவுடன் அங்கிருந்து வெளியேறி அசாமில் கடந்த கால வாழ்க்கையை மறைத்து வாழ்ந்து வருகிறார்
நாயகி ஸ்ருதிஹாசனையும் அவரது தந்தையையும் 7 வருடமாக ஒரு கொலைகார கும்பல் தேடிக்கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் ஸ்ருதிஹாசன் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். ஸ்ருதிஹாசன் இந்தியாவுக்கு வருவதை தெரிந்து கொண்ட ஸ்ரேயா ரெட்டி முன் பகைக்காக ஸ்ருதிஹாசனை கடத்தி வரச்சொல்கிறார்.
இந்த நேரத்தில் ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபிக்கு போன் செய்து மகள் இந்தியா வந்துவிட்டதாகவும் நீங்கள் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் நேரம் வந்துவிட்டதாகவும் கூறுகிறார்
ஸ்ருதிஹாசனை காப்பாற்ற அவர் பாதுகாப்பாக இருக்க பிரபாஸிடம் அனுப்பி வைக்கிறார் மைம் கோபி.
ஈஸ்வரிராவிடம் கொடுத்த சத்தியத்திற்காக எந்த வன்முறையிலும் இறங்காமல் அமைதியாக வாழ்ந்து வருகிறார் பிரபாஸ்.
ஒரு கட்டத்தில் எதிரிகளால் ஸ்ருதிஹாசன் உயிருக்கு ஆபத்து வருகிறது. முடிவில் பிரபாஸ் ஈஸ்வரிராவிடம் செய்த சத்தியத்தை மீறி நாயகி ஸ்ருதிஹாசனை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
ஆளுமை நிறைந்த நாயகனாக நடிக்கும் பிரபாஸுக்கு கம்பிரமாக வாட்டசாட்டமாக இருக்கும் அவருடைய ஒரு அடியே இடி போல் விழுவதை ஏற்றுக்கொள்ள முடிகிறது.
நண்பன் பிரித்விராஜ் சுகுமாறனுக்காக உருகும் காட்சிகளில் நம்மை கண் கலங்க வைத்துள்ளார் பிரபாஸ் .
நாயகி ஸ்ருதிஹாசன் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
வில்லனாக நடித்திருக்கும் பிரித்விராஜ் .இரண்டாம் மனைவியின் மகனாக இரண்டாம் பட்சமாக கருதப்பட்டு அவமானப் படுத்தப்படும் போது நிராகரிப்பின் வலியை உணர்வுபூர்வமான நடிப்பில் வெளிப்படுத்துக்கிறார்
நண்பனாகவும், துரோகியாகவும் நடிப்பில் முத்திரை பதிக்கிறார் பிரித்விராஜ்.
ராஜம் மன்னார் வேடத்தில் நடித்திருக்கும் ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, பிரபாஸின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ், ராஜம் மன்னாரின் மகளாக நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய், மைம் கோபி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திரத்துடன் இணைந்து சிறப்பாக நடிக்கின்றனர் .
ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்,,,,பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.
பவுன் கவுடாவின் ஒளிப்பதிவில் காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கிய விதம் பாராட்டத்தக்கது.
முந்தைய வெற்றி படத்தின் சாயலில் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மிரள வைக்கும் பிரம்மாண்டத்துடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல்.
ரேட்டிங் ; 3.5 / 5
மிரள வைக்கும் பிரம்மாண்ட அதிரடி ஆக்க்ஷனான 'சலார் ''
Comments