ஷார்ட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் கிரண் துரைராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் 'நவயுக கண்ணகி '
உயர் சாதியை சேர்ந்த மருத்துவரான பவித்ரா தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த விமல்குமாரை காதலிக்கிறார் .
இந்த காதலை ஏற்றுக்கொள்ளாத ஜாதி வெறி பிடித்த பவித்ராவின் அப்பா தென்பாண்டியன் தன் அடியாட்களை வைத்து விமல்குமாரை கொலை செய்து விடுகிறார்.
தென்பாண்டியனை பழி வாங்க நினைக்கும் பவித்ரா தன்னுடன் பணிபுரியும் சக மருத்துவர்களின் உதவியுடன் புதைக்கப்பட்ட விமல்குமாரின் இறந்த உடலை கைப்பற்றி, அந்த உடலில் இருந்து மருத்துவ உதவியுடன் உயிரணுக்களை பிரித்து எடுத்து, தன் உடலில் உள்ள கருப்பைக்குள்செலுத்தி கொள்கிறார்.
விமல்குமாரின் உயிரணுவினால் பவித்ரா கர்ப்பமாகிறார்.
இது தெரியாத அப்பா தென்பாண்டியன் பவித்ராவின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்.
திருமணத்திற்கு பின் பவித்ரா கர்ப்பமாக இருப்பது புது மாப்பிள்ளை டென்சில் ஜார்ஜிக்கு தெரிய வர ,,,,, அவரிடம் விமல்குமாரை காதலித்த கதையையும் ஜாதி வெறியினால் தன் தந்தை செய்த ஆணவ கொலையினால் தந்தையை பழி வாங்க தான் கர்ப்பமான கதையையும் புது மாப்பிள்ளை டென்சில் ஜார்ஜிடம் சொல்கிறார் பவித்ரா .
முடிவில் தந்தையை பழி வாங்க கர்ப்பமான பவித்ராவுக்கு குழந்தை பிறந்ததா ?
திருமணமான புது மாப்பிள்ளை டென்சில் ஜார்ஜ் பிறந்த குழந்தைக்கு தாயான பவித்ராவை ஏற்று கொண்டாரா ? இல்லையா ? எனபதை சொல்லும் படம்தான் 'நவயுக கண்ணகி '
கதையின் நாயகியாக நடிக்கும் பவித்ரா,,,,,, ஸ்வாதி கதாபாத்திரமாகவே படம் முழுவதும் வாழ்கிறார். உணர்வுபூர்வமான நடிப்பில் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
இவருடன் நடித்த நடிகர்கள் அனைவரும் கதைக்கேற்றபடி சிறப்பாக நடித்துள்ளனர் .
ஆல்வின் ப்ருனோ இசையில் பாடல்களும் , கெவினின் பின்னணி இசையும் , தர்ம தீரன் ஒளிப்பதிவும் கதைக்கு பக்க பலமாக பயணித்துள்ளது .
வெளி நாட்டில் விபத்து அல்லது வேறுகாரணங்களால் இறக்கும் சில ஆண் களின் உடலில் இருந்து உயிரணுக்களை பிரித்து எடுத்து சில பெண்கள் தங்கள் கருப்பைக்குள் செலுத்தி குழந்தை பெற்று கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
இது போன்ற சம்பவத்தை கதையின் மையமாக வைத்து ஜாதி வெறியினால் கொலையான காதலனை நினைத்து தன் தந்தையை பழி வாங்கும் புரட்சி பெண்ணின் கதையினை திரைக்கதையுடன் இணைத்து அம்பேத்கர், புத்தர், பெரியார் படங்களுடன் ஜெய் பீம் என்கிற வசனம் சில இடங்களில் வருமாறு காட்சிகள் அமைத்து வித்தியாசமான கதைக்களம் கொண்ட புரட்சி படமாக படத்தொகுப்புடன் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் கிரண் துரைராஜ் .
ரேட்டிங் ; 3.5 / 5
சாதி பிரிவினையை வேரோடு களையெடுக்கும் புதுமை பெண்தான் இந்த 'நவயுக கண்ணகி '
Comments