ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பல்லவ மன்னர்களில் ஒருவரான மன்னன் நந்திவர்மன் அனுமந்தபுரம் என்னும் கிராமத்தில் கட்டிய சிவன் கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்திருப்பதும், அந்த கோவிலில் புதையல் இருப்பதும் தொல்லியல் துறைக்கு தெரிய வருகிறது.
அதன்படி, தொல்லியல் துறை பேராசிரியர் நிழல்கள் ரவியின் உத்தரவு படி போஸ் வெங்கட் தன்னுடன் பணிபுரியும் குழுவுடன் ஆய்வு மேற்கொள்ள அந்த கிராமத்துக்கு செல்கிறார் .
அந்த கிராமத்தில் மாலை 6 மணிக்கு மேல் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அமானுஷ்ய சம்பவங்கள் அங்கு நடப்பதால் மக்கள் அந்த இடத்திற்கு செல்வதை தவிர்ப்பதோடு, அந்த இடத்தில் போஸ் வெங்கட் குழுவை ஆய்வு நடத்த தடையாக நிற்கிறார்கள்.
இந்நிலையில் கிராம மக்களை சமாதானப்படுத்தி அந்த இடத்தில் போஸ் வெங்கட் குழு ஆய்வு மேற்கொள்ளும் போது, அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் மர்மமான முறையால் கொல்லப்படுவதோடு, ஆய்வு குழுவில் இருந்த மற்றொரு மாணவரும் கொல்லப்படுகிறார்.
இந்ததொடர் கொலைகள் பற்றி விசாரிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாயகன் சுரேஷ் ரவி களத்தில் இறங்கி கொலைகளின் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
அவருக்கு ஆய்வு குழுவைச் சேர்ந்த நாயகி ஆஷா வெங்கடேஷ் உதவி செய்ய முடிவில் புதைந்து போன நந்திவர்மன் கட்டிய கோவிலுடன் புதையலும் புதைந்திருக்கிறதா? என்பதை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ரவி கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதே ‘நந்திவர்மன்’ படத்தின் மீதிக்கதை.
போலீஸ் அதிகாரியாக நாயகனாக நடிக்கும் சுரேஷ் ரவி காதல் காட்சிகளில் காதல் நாயகனாகவும், ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடி நாயகனாகவும் இயல்பான நடிப்பில் நடித்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆஷா வெங்கடேஷ் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
வில்லன்களாக நிழல்கள் ரவி மற்றும் கஜராஜ் ,போஸ் வெங்கட்,மீசை ராஜேந்திரன் , ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், கோதண்டம், ஜே.எஸ்.கே.கோபி என படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .
ஜெரால்டு பிலிக்ஸ் இசையும் ,ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சேயோன் முத்து ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
புதையலுடன் புதைந்து போன நந்திவர்மன் கட்டிய கோவிலின் கதையை மையமாக கொண்டு விறு விறுப்பான திரைக்கதையுடன் கண்ணுக்கு தெரியாத உலோகத்தினால் செய்யப்பட்ட நந்திவர்மனின் மாய வாள்,,நந்திவர்மனின் வாளின் கதையை விவரிக்கும் கிராபிக்ஸ் காட்சிகள்,,, கிளைமாஸ்கில் வரும் திடீர் திருப்பம் என தமிழக மன்னர்களின் வரலாற்றில் எவரும் அறியப்படாத கதையை படமாக அனைவரும் ரசிக்கும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் பெருமாள் வரதன்.
Comments