top of page

'மதிமாறன்' விமர்சனம் புலனாய்வில் மன்னன் இந்த 'மதிமாறன்'


சிவந்திபட்டி கிராமத்தில் தபால் நிலையத்தில் பணிபுரியும் எம்.எஸ்.பாஸ்கருடன் தாய் மற்றும் இவானாவுடன் உயரத்தில் குறைபாடு உள்ள வெங்கட் செங்குட்டுவன் வாழ்ந்து வருகிறார்.

அக்காவான இவானாவும் தம்பியான வெங்கட் செங்குட்டுவனும் பிறப்பில் இரட்டையர்கள். தம்பி வெங்கட் செங்குட்டுவன் உடல் வளர்ச்சி இல்லாமல் மூன்று முதல் நான்கு அடி உயரம் மட்டுமே உள்ளதால் பள்ளி பருவம் முதல் கல்லூரி வரை அனைவரது கேலி கிண்டலுக்கு ஆளாகிறார்.

இந்நிலையில் கல்லூரியில் படித்து வரும் இவானா கல்லூரி பேராசிரியருடன் கொண்ட காதலால் கர்ப்பமான நிலையில் யாருக்கும் தெரியாமல் ஓடி விடுகிறார்.

இதனால் மனமுடைந்த எம் எஸ் பாஸ்கரும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

காதல் திருமணம் செய்துகொண்டு சென்னைக்கு சென்ற இவானாவை தேடி சென்னை செல்கிறார் வெங்கட் செங்குட்டுவன்.

சென்னையில் வெங்கட் செங்குட்டுவனின் கல்லூரி காதலி ஆராத்யா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவரது உதவியுடன் இவானாவின் முகவரியை கண்டுபிடித்து அப்பா, அம்மா தற்கொலைக்கு காரணமான இவனாவை கண்டித்து அவருடன் பேசாமல் இருக்கிறார் .

இதனிடையே சென்னையில் தொடர்ந்து மர்ம முறையில் திருமணமான பெண்கள் கொல்லப்படுகின்றனர் . அப்போது இவானாவின் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு இளம்பெண் மாயமானது குறித்து தெரிய வர, தனது கல்லூரி காதலியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆராத்யாவின் உதவியோடு குற்றவாளிகளை கண்டுபிடிக்க புலனாய்வில் விசாரணையை மேற்கொள்கிறார் வெங்கட் செங்குட்டுவன் .

போலீஸ் உதவியுடன் வெங்கட் செங்குட்டுவனின் விசாரணையில் எதிர்பாராத திருப்பங்களுடன் திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது

முடிவில் தொடர்ந்து பெண்களை கொலை செய்யும் சீரியல் கொலைகாரனை வெங்கட் செங்குட்டுவன் கண்டுபிடித்தாரா ?

அக்கா இவானாவுடன் மீண்டும் இணைந்து வெங்கட் செங்குட்டுவன் வாழ்ந்தாரா ? என்பதை சொல்லும் படம்தான் 'மதிமாறன்'

நெடுமாறன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தோற்றம் கொண்ட கதையின் நாயகன் வெங்கட் செங்குட்டுவன் கதையுடன் இணைந்து உணர்வுபூர்வமான நடிப்புடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அக்கா மதியாக இவானா, தபால் நிலைய ஊழியர் சுந்தரமாக எம்.எஸ் பாஸ்கர், போலீஸ் பிரபாவதியாக காதலி ஆராத்யா,போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேன், செக்யூரிட்டி பவா செல்லதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதர்ஷன் கோவிந்த், வில்லன் சந்திரன் மாணிக்கவேல் , பிரவீன் குமார்.ஈ என அனைவரும் மிக சிறப்பாக நடிப்பில் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர்

கார்த்திக் ராஜாவின் இசையுடன் பின்னணி இசை அசத்தல்

ஒளிப்பதிவாளர் பர்வேஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .


உருவ கேலி செய்து யாரும் யாரையும் மரியாதை குறைவாக பேசக்கூடாது அவருக்குள் இருக்கும் திறமையை மதிக்க வேண்டும் என்ற அழுத்தமான கருத்தினை மையமாக கொண்டு,,, குடும்ப கதையாக செல்லும் திரைக்கதையுடன் படத்தின் முடிவில் விறுவிறுப்பான க்ரைம் திரில்லராக எதிர்பாராத திருப்பத்துடன் கதையை மாற்றி அனைவரும் ரசிக்கும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன்.


ரேட்டிங் ; 3.5 / 5


புலனாய்வில் மன்னன் இந்த 'மதிமாறன்'






Comments


bottom of page