.
இயக்குனர் ஆக ஆசைப்பட்டு எந்த வாய்ப்பும் கிடைக்காததால் தங்கள் ஊருக்கு செல்வதற்காக சத்யமூர்த்தி, விஜய், கோபி, சுதாகர் மற்றும் நண்பர்களுடன் பஸ் ஸ்டாண்டுக்கு வருகின்றனர் .
அந்த நேரத்தில் போராட்டம் நடைபெறுவதால் எந்த பஸ்ஸும் வராது என அங்குள்ளவர்கள் சொல்ல,,,, இரவு நேரமானதால் ஆபாச பட போஸ்டரை பார்த்து அந்த படத்தை பார்ப்பதற்காக படம் ஓடும் திரையரங்கிற்கு செல்கிறார்கள்.
மற்றொரு பக்கம் யாஷிகா ஆனந்த் மற்றும் ஹரிஜா ஐ.டி.கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.
அப்போது நண்பர்கள் வட்டாரத்தில் ஆபாச படத்தை பெண்களால் திரையரங்கில் பார்க்க முடமுடியாது என விவாதம் எழுகிறது. இதனை சவாலாக எடுத்துக் கொண்ட யாஷிகா ஆனந்தும், ஹரிஜாவும் நாங்கள் ஆபாச படம் பார்த்துக் காட்டுகிறோம் என இரவு படம் பார்க்க அதே திரையரங்கிற்கு செல்கிறார்கள்.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் சில பேர் , கள்ள காதலர்கள் இவர்களுடன் குடிகார கிரேன் மனோகர் என பலர் அந்த திரையரங்கிற்கு டிக்கெட் எடுத்து படம் பார்ப்பதற்கு வருகின்றனர் .
திரையரங்கில் படம் தொடங்கும் போதே ஆபாச படம் இல்லாமல் அமானுஷ்ய சக்தி கொண்ட படம் திரையில் தெரிகிறது.
திரையரங்கிற்குள் சென்றவர்கள் அனைவரும் பயத்தால் திரையரங்கை விட்டு வெளியேற முயற்சி செய்ய அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய வெளியே வர முடியாமல் திரையரங்கிற்குள் உள்ளேயே எல்லோரும் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர் .
இந்நிலையில் 25 வருடங்களாக உள்ளேயே மாட்டிக்கொண்டு தவிக்கும் ஜார்ஜ் மரியன் திரையரங்கில் சிக்கி கொண்டு இருப்பவர்களிடம் உள்ளே நான்கு அமானுஷ்ய சக்தி கொண்ட பேய்கள் இருக்கின்றனர் . அவைகள் உங்களை பார்த்து என்ன செய்ய சொல்கிறதோ அவைகளை நீங்கள் செய்தால் உங்களுக்கு இங்கிருந்து விடுதலை கிடைக்கும் என சொல்கிறார் .
ஜார்ஜ் மரியன் சொல்வதை போல சாரா ,அப்துல் ,ரித்விகா , R S கார்த்திக் என நான்கு பேய்களும் எங்களை கொன்ற திரையரங்கு உரிமையாளரான முனிஷ்காந்த்தை எங்களிடம் ஒப்படைத்தால் உங்கள் அனைவரையும் நாங்கள் விடுதலை செய்கிறோம் என முனிஷ்காந்த்தை கடத்தி வர சில பேரை மட்டும் பேய்கள் வெளியே அனுப்புகின்றனர் .
முடிவில் பேய்களின் கட்டளைப்படி வெளியே சென்றவர்கள் முனிஷ்காந்த்தை கடத்தி வந்து பேய்களிடம் ஒப்படைத்தார்களா ?
25 வருடங்களாக பேய்களின் பிடியில் உள்ளேயே மாட்டிக்கொண்டு தவித்த ஜார்ஜ் மரியனின் நிலை என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’
முனீஷ்காந்த் , யாஷிகா ஆனந்த் , ஹரிஜா, சாரா ,அப்துல் ,ரித்விகா , R S கார்த்திக் ,ஜார்ஜ் மரியன் , கிரேன் மனோகர் யூ டியூப்பில் பிரபலமான சத்யமூர்த்தி, விஜய், கோபி, சுதாகர் என அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
கெளஷிக் கிரிஷ் இசையும் ,ஒளிப்பதிவாளர் ஜோஸ்வா பிரேஸ் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.
பேய்களின் பிடியில் இருக்கும் திரையரங்கிற்குள் படம் பார்க்க சென்றவர்கள் வெளியே வர முடியாமல் தவிக்கும் கதையை வைத்து ,,, பயமுறுத்தும் பேய் கதைக்கான திரைக்கதையுடன் சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் காமெடி கலந்த பேய் படம் பார்த்த உணர்வினை ரசிகர்களுக்கு ஏற்படும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ரமேஷ் வெங்கடேஷ்.
ரேட்டிங் ; 3.5 / 5
பயமுறுத்தாத ரசிக்க வைக்கும் பேய் படம்
Comentarios