துபாயில் இருந்து சில வருடங்களுக்கு பின் மும்பையில் உள்ள தன் வீட்டுக்கு வருகிறார் விஜய் சேதுபதி .
விடிந்தால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் என்பதால் இரவு நேரத்தில் நகரமே விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலித்துக் கொண்டிருக்க, விஜய் சேதுபதி ஒரு ஓட்டலுக்கு செல்கிறார்.
அப்போது ஒருவர் விஜய்சேதுபதியிடம் நான் அவசர வேலையாக வெளியே செல்கிறேன் நான் வெளியில் செல்வதை அங்கு மகளுடன் இருக்கும் கத்ரினா கைஃப்பிடம் சொல்லிவிடுங்கள் என்று கூறுகிறார்.
விஜய் சேதுபதியும் அங்கு இருக்கும் கத்ரினா கைஃப்பிடம் அவர் சொன்னதை சொல்கிறார் .
இந்நேரத்தில் முதல் பார்வையிலே விஜய்சேதுபதிக்கு கத்ரீனா கைஃப்பை பிடித்து போக ,,,இருவரும் அந்த ஒரு இரவில் நண்பர்களாகி நெருக்கமாக பழகுகின்றனர்.
ஒரு கட்டத்தில் கத்ரினா கைஃப்பிற்கு துணையாக விஜய் சேதுபதி அவர் வசிக்கும் வீடு வரை ஒன்றாக பயணிக்கிறார்.
அறிமுகம் இல்லாத விஜய் சேதுபதி கத்ரினா கைஃப்பின் அழைப்பின் பேரில் வீட்டிற்குள் செல்கிறார் .
இருவரும் தங்களது வாழ்க்கைப் பற்றி பேசும் போது, கத்ரினா கைஃப் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுடன் மகளுடன் வாழ்வதை சொல்ல, விஜய் சேதுபதி இறந்து போன காதலி ராதிகா ஆப்தேயின் பிரிவை பற்றி சொல்கிறார்.
அந்நேரத்தில் கத்ரினா கைஃப் தனது மகளை தூங்க வைத்துவிட்டு, விஜய் சேதுபதியுடன் மீண்டும் வெளியே சென்றுவிட்டு, திரும்ப வீட்டுக்கு வரும்போது கத்ரினா கைஃப்பின் கணவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்த நிலையில் பிணமாக கிடக்கிறார் .
முடிவில் கத்ரினா கைஃப்பின் கணவரை சுட்டு கொன்ற மர்ம நபர் யார் ?
என்ன காரணத்திற்காக இந்த கொலை நடந்தது ? போலீசாரின் தீவிர விசாரணையில் கொலையாளியை கைது செய்தார்களா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘மெரி கிறிஸ்துமஸ்’
கதையின் நாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதி ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் அதிகப்படியான உணர்வுகளை வெளிப்படுத்தாமல் முடிவில் ரசிகர்களின் கை தட்டலுடன் இயல்பான நடிப்பை பாராட்டும்படி நடித்திருக்கிறார் .
நாயகியாக அழகான கத்ரீனா கைஃப் தாயாகவும் காதலியாகவும் உணர்வுபூர்வமான நடிப்பில் ரசிகர்களை கவரும் நடிப்பில் ஜொலிக்கிறார் .
கவின் பாபு, ராதிகா சரத்குமார், சண்முகராஜா, ராதிகா ஆப்தே, ராஜேஷ், குழந்தை நட்சத்திரம் பரி மகேஷ்வரி ஷர்மா, அஷ்வினி கல்சேகர் என நடித்த நடிகர்கள் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
பிரதீப் குமார்.எஸ், அப்துல் ஜப்பார், பிரசன்னா பாலா நடராஜன், லதா கார்த்திகேயன் ஆகியோரது எழுத்துக்களுடன் ,மது நீலகண்டனின் ஒளிப்பதிவும் ,ப்ரீதம் இசையும் ,டேனியல் பி.ஜார்ஜின் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் .
ஒரு வீட்டில் நிகழும் மர்ம மரணம் அதன் பின் நடக்கும் திரில்லான சம்பவங்கள் இதன் பின்னணியில் சஸ்பென்ஸ் கலந்த கதையுடன் விறுவிறுப்பான வித்தியாசமான ஒரே நேர் கோட்டில் பயணிக்கும் திரைக்கதையுடன் கத்ரினா கைஃப்பின் கணவரை சுட்டு கொன்றது யார் என்பது யாரும் யூகிக்க முடியாத சஸ்பென்ஸுடன் காட்சிகளில் அமைதி இருந்தாலும் ரசிகர்கள் சீட்டின் நுனியில் மிரளும்படி அமர்ந்து பார்க்குமளவில் எதிர்பாராத திருப்பங்களுடன் க்ரைம் திரில்லர் படத்தை பார்த்த உணர்வினை ரசிகர்கள் உணரும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.
ரேட்டிங் ; 3.5 / 5
ரசிக்கும் திரைக்கதை அமைப்பில் மிரட்டலான க்ரைம் திரில்லர் !
Comments