top of page
mediatalks001

’மிஷன் - சாப்டர் 1’ பரபரப்பான தெறிக்க விடும் ஆக்‌ஷன் காட்சிகளை ரசிப்பவர்களுக்கு விருந்து படைக்கும் இயக்குனர் ! பட விமர்சனம்




கோவை மாவட்டத்தில் இருக்கும் அருண் விஜய் உயிருக்கு போராடும் தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார் .

இந்நிலையில் இந்தியாவில் மிஷன் தசரா என்ற பெயரில் மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களை அழிக்க தீவிரவாத கும்பல் சதி திட்டம் தீட்டுகிறது. அருண் விஜய் தன் மகள் மருத்துவ செலவிற்கான மொத்த பணத்தையும் லண்டனிற்கு நேரடியாக எடுத்து செல்ல முடியாது என்பதால் ஹவாலா முறையில் லண்டனில் பணத்தை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்.

அருண் விஜய்யிடம் பழைய பத்து ரூபாய் நோட்டு ஒன்று கொடுக்கப்படுகிறது . லண்டனில் பழைய பத்து ரூபாய் நோட்டு கொடுத்தால்தான் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நேரத்தில் லண்டனுக்கு செல்லும் அருண் விஜய் மகளை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க அங்கு நர்சாக பணிபுரியும் நிமிஷா சஜயன் அருண் விஜய்க்கு உதவி செய்கிறார்.

மருத்துவ செலவிற்கான மொத்த பணத்தையும் வாங்க அருண் விஜய் பஸ்ஸில் செல்லும்போது திருட்டு கும்பல் வழிப்பறியில் இறங்க ,,,பர்ஸை மீட்கும் முயற்சியில் இருக்கும் அருண் விஜய்யை லண்டன் போலீசார் கைது செய்து சிறையில் அடைகின்றனர் .

சிறைஅதிகாரியான எமி ஜாக்சனிடம் அருண் விஜய் தன் மகளின் மருத்துவ நிலையை சொல்லி புரிய வைக்க முயற்சி செய்ய,,,, முடியாமல் போகிறது. இதற்கிடையே, அந்த ஜெயிலில் இருக்கும் மூன்று பயங்கரவாதிகளை தப்பிக்க வைப்பதற்காக தீவிரவாத குழு நடத்தும் சதிதிட்டத்தில் தன் கட்டுப்பாட்டுக்குள் சிறைச்சாலையை கொண்டு வருகிறது தீவிரவாத குழு . தலைவனின் உத்தரவின் பேரில் சிறையில் இருக்கும் அனைத்து கைதிகளும் அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் .

அனைவரையும் தடுத்து நிறுத்தும் அருண் விஜய், அந்த மூன்று பயங்கரவாத கைதிகளை அங்கிருந்து தப்பிக்க விடாமல் செய்துவிடுகிறார்.

அருண் விஜயின் நடவடிக்கையால் ஆத்திரமடையும் பயங்கரவாதக் குழுவின் தலைவன் சிறையில் இருக்கும் மூன்று கைதிகளை தப்பிக்க வைக்க செய்யும் தொடர் முயற்சிகளை முறியடிக்க அதிரடியாக களம் இறங்குகிறார் அருண்விஜய் .

முடிவில் மூன்று பயங்கரவாத கைதிகளை சிறையிலிருந்து தப்பிக்க விடாமல் தடுத்து நிறுத்தும் அருண்விஜய் யார் ?

உயிருக்கு போராடும் அருண்விஜய் மகளின் நிலை என்ன ? என்பதை சொல்லும் படம்தான் 'மிஷன் சாப்டர் 1'

கதையின் நாயகனாக நடிக்கும் அருண் விஜய் , மகளின் உயிரை காப்பாற்ற போராடும்இயல்பான தந்தையாகவும், லண்டன் சிறைச்சாலையில் தப்பிக்க முயற்சிக்கும் கைதிகளை அடித்து பந்தாடும்போது ஆக்ரோஷ அதிரடி ஆக்‌ஷன் நாயகனாக நடிப்பில் பிரமிக்க வைக்கிறார் .

சிறை அதிகாரியாக நடிக்கும் எமி ஜாக்சன் அதிரடி நாயகியாக நடிக்க முயற்சி செய்கிறார் ,,,

நர்சாக நடிக்கும் நிமிஷா சஜயன் ,வில்லனாக மிரட்டும் பரத் போபண்ணா, சர்தாராக நடிக்கும் அபி ஹாசன், தீவிரவாதியாக நடிக்கும் நான் சரவணன் ,சிறுமி இயல் ,விரஜ் , ஜேசன் ஷா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும் ,சந்தீப் கே.விஜயனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .

படம் முழுக்க சிறைச்சாலையில் நடக்கும் அதிரடியான ஆக்‌ஷனை மையமாக கொண்ட கதையுடன் ,,, பரபரப்பான சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்புடன் ,, மிக சிறப்பான ஆக்‌ஷன் காட்சிகளுடன் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.


ரேட்டிங் ; 3.5 / 5


பரபரப்பான தெறிக்க விடும் ஆக்‌ஷன் காட்சிகளை ரசிப்பவர்களுக்கு விருந்து படைக்கும் இயக்குனர் !!


Comentários


bottom of page