ஆங்கிலேயர் ஆதிக்கம் செய்யும் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் அம்மா விஜி சந்திரசேகருடன் வாழ்கிறார் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த தனுஷ்.
ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக ராஜாக்களும் ராஜாக்களுக்கு அடிமைகளாக ஒடுக்கப்பட்ட கிராம மக்களும் இருப்பதை விரும்பாத தனுஷ் ஆங்கிலேய ராணுவத்தில் சேர்ந்து மரியாதையாக வாழலாம் என்று நினைத்து ராணுவத்தில் சேருகிறார்.
மில்லர் என்ற பெயரில் சிப்பாயாக இருக்கும் தனுஷ், சுதந்திரத்திற்காக போராடும் கிராம மக்களை ஆங்கிலேய அதிகாரியின் உத்தரவின் பேரில் சுட்டு கொல்கிறார் .
பின்னர் மனவேதனை பட்டு சுட சொன்ன ஆங்கிலேய அதிகாரியை கொலை செய்துவிட்டு குமரவேல் தலைமையில் செயல்படும் கொள்ளை கூட்டத்தில் சேர்கிறார் தனுஷ்.
சிறு போஸ்டர் அடித்து தேடப்படும் கொலையாளியாக தனுஷை பிடிக்க ஆங்கிலேயர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர் .
இந்நிலையில் ராஜா ஜெயபிரகாஷின் விருப்பமில்லாமல் கிராம கோயிலில் உள்ள பழமையான பொக்கிஷமான சிலையை ஆங்கிலேய கவர்னர் எடுத்து சென்றுவிடுகிறான்
பழமையான சிலையை ஆங்கிலேய கவர்னரிடமிருந்து மீட்க ஜெயபிரகாஷும், ஜான் கொக்கனும் தனுஷின் உதவியை கேட்கின்றனர் ..
ராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கிலேய கவர்னரை கொலை செய்து பொக்கிஷத்தை மீட்கும் தனுஷ், அதை ராஜாவிடம் கொடுக்காமல் கிராமத்தை விட்டு வேறு இடத்திற்கு சிலையை எடுத்து செல்ல திட்டமிடுகிறார் .
ஆங்கிலேய கவர்னரை தனுஷ் கொலை செய்ததால் ஆத்திரமடையும் ஆங்கிலேயர்கள் தனுஷ் இருக்கும் இடத்தை சொல்ல சொல்லி கிராம மக்களை சித்ரவதை செய்து கொல்கிறார்கள்.
தகவலறிந்த தனுஷ் ஆங்கிலேய கும்பலிடமிருந்து கிராம மக்களை காப்பாற்ற கொலை வெறித்தனமாக கிராமத்துக்குள் நுழைகிறார் .
முடிவில் ஆங்கிலேய கும்பலின் கொலை வெறி தாக்குதலில் சிக்கிய கிராம மக்களை தனுஷ் காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ’கேப்டன் மில்லர்’
நாயகனாக நடிக்கும் கிராம இளைஞரான தனுஷ் கேப்டன் மில்லராக மக்களுக்காக போராடும் போராளியாக உருமாறும்போதும் உணர்ச்சிகரமான நடிப்பில் சுதந்திர போராட்டகாரர்கள் சுடப்பட்ட பிறகு மனதால் கண் கலங்கும் காட்சிகளில் இயல்பான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .
இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் போராளியாக நடிக்கும் பிரியங்கா மோகன்,
கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் கிளைமாஸ்க்கில் வரும் காட்சிகளால் கரகோஷத்தினால் அரங்கமே அதிர்கிறது .
வில்லன்களாக நடிக்கும் ஜெய பிரகாஷ் , ஜான் கொக்கன் ,காளி வெங்கட், குமரவேல் ,அப்துல் லீ, விஜிசந்திரசேகர், அருணோதயன், நிவேதிதா சதீஷ், வினோத் கிஷன் என நடித்த நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும் ,ஒளிப்பதிவாளர் சித்தார்த்தாவின் ஒளிப்பதிவும் ,கலை இயக்குநர் டி.ராமலிங்கத்தின் கலைப்பணியும் ,ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் ஆக்க்ஷனும் படத்திற்கு பக்க பலமாக இருக்கின்றது .
அய்யனார் கோவிலை கட்டிய ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தெய்வத்தை பார்க்க தடை போடும் இன வெறி கொண்ட ஆதிக்க சாதியினரின் அடக்குமுறையை கதையாக கொண்டு உரிமைக்காக போராடும் போராளியின் வாழ்வியலை திரைக்கதையுடன் இணைத்து படம் முழுக்க விறு விறுப்பான ஆக்க்ஷனுடன் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.
ரேட்டிங் ; 3 / 5
Comments