
2000ஆம் ஆண்டில் நடக்கும் கதையாக 'கைலாசம்' கிராமத்தில் மிக முக்கிய புள்ளியாக ஊர் தலைவராக வாழ்ந்து வருகிறார் மாரிமுத்து. மாரிமுத்துவின்
மகள் இனியா.
இனியாவிற்கு யோகிபாபு மீது தீவிர காதல்.
காதலை மாரிமுத்து ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதற்காக, இருவரும் ஊரை விட்டு ஓட திட்டமிடும் நேரத்தில் மாரிமுத்துவின் அடியாட்கள் அவர்களை பிடித்து அதில் யோகிபாபுவை கொன்று பாழடைந்த கிணற்றுக்குள் வீசிவிடுகிறார்கள்
அந்த நேரத்தில் மாரிமுத்துவின் வீட்டில் இருந்த விலையுயர்ந்த மன்னர் காலத்து கிரீடம் ஒன்றும் அதே பாழடைந்த கிணற்றுக்குள் இருக்கின்றது கொலையான யோகி பாபு ஆவியாக வந்து அடிக்கடி கிராம மக்களை பயமுறுத்துகிறார் .
இந்நிலையில் கிராமத்தில் இருக்கும் விலையுயர்ந்த கிரீ டத்தை திருட மகேஷ் ,பால சரவணன், செண்ட்ராயன் அந்த கிராமத்துக்கு வருகின்றனர் .
இந்நேரத்தில் கிரீ டம் பாழடைந்த கிணற்றில் இருப்பது அனைவருக்கும் தெரிய வருகிறது.
ஒரு கட்டத்தில் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களும் கிராம மக்களும் கிணற்றில் இறங்கி கிரீடத்தை எடுக்க பயப்படுகிறார்கள்.
முடிவில் கிணற்றின் மீதான ஊர் கிராம மக்களின் பயத்துக்கு காரணமான கிணற்றில் கொல்லப்பட்ட யோகிபாபுவின் ஆவியை மீறி கிரீடம் எடுக்கப்பட்டதா? இல்லையா?, என்பதை சொல்லும் படம்தான் ‘தூக்குதுரை’
வழக்கமான பாணியில் காமெடி கலந்த நடிப்பில் யோகி பாபு ,இனியா ,மாரிமுத்து ,நமோ நாராயணன் , பாலசரவணன், மகேஷ், செண்ட்ராயன், நான் கடவுள் ராஜேந்திரன் ,அஸ்வின், சத்யா என நடித்த நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
ரவிவர்மாவின் ஒளிப்பதிவும், கே.எஸ்.மனோஜின் இசையும் படத்திற்கு பக்க பலம் .
படம் முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் டெனிஸ் மஞ்சுநாத்.
ரேட்டிங் ; 3 / 5
コメント