சோலையூர் கிராமத்தில் மூலிகை வியாபாரம் செய்யும் சித்த மருத்துவர் வீரபாபு ஆதரவற்ற குழந்தைகளை ஆதரவளித்து வாழ்வளிக்கும் காப்பகம் ஒன்றை நடத்துகிறார் . சித்த மருத்துவர் வீரபாபு திருமணம் செய்ய நிச்சயித்த பெண் நாயகி மஹானாவுடன் திருமணத்திற்காக புத்தாடை வாங்குவற்கு சென்னை செல்கிறார்.
அங்கே மஹானாவின் அக்கா குழந்தை காணாமல் போக, வீரபாபு அக்குழந்தையை தேடிச்செல்லும் போது பல திடுக்கிடும் உண்மைகளை கண்டுபிடிக்கிறார்.
குழந்தை கடத்தல் கும்பல் பெரிய பின்பலத்துடன் செயல்படுவதும், அந்த கும்பலின் தலைவன் மிக பெரிய தாதாவாக ஆந்திராவில் இருப்பதையும் தெரிந்து கொள்கிறார்.
முடிவில் கடத்தல் கும்பலின் தலைவனை தேடி ஆந்திரா செல்லும் சித்த மருத்துவர் வீரபாபு எதிர்கொள்ளும் சிக்கலான பிரச்சனைகள் என்ன? கடத்தல் கும்பலின் தலைவனை கண்டுபிடித்து அவனிடம் உள்ள குழந்தைகளை சித்த மருத்துவர் வீரபாபு மீட்டாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ’முடக்கறுத்தான்’
சித்த மருத்துவர் டாக்டர்.கே.வீரபாபு கொரோனா பரவலின் போது மூலிகை வைத்தியம் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றிய மனித நேய மிக்க மனிதர் .தனக்கு தெரிந்த மூலிகை வைத்தியத்தை வைத்தே தன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பதால் சமூக அக்கறை கொண்ட மனிதராக, குழந்தை கடத்தலை தடுத்து அவர்களை மீட்கும் அதிரடி ஆக்க்ஷன் நாயகனாக இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .
நாயகியாக நடிக்கும் மஹானா, வில்லனாக மிரட்டும் சூப்பர் சுப்பராயன், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி , மயில்சாமி ,சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ் பாவா லட்சுமணன், முத்துக்காளை, வைஷ்ணவி, குழந்தை ஷாலினி ரமேஷ், தயாளன்,ரமேஷ், இந்திரஜித் என நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
சிற்பியின் இசையில் பழனிபாரதியில் பாடல்கள் கேட்கும் ரகம்.
ஒளிப்பதிவு-அருள்செல்வன், படத்தொகுப்பு-ஆகாஷ்,ஒலிப்பதிவு-ஆண்டனி மைதீன், சண்டை- சூப்பர் சுப்பராயன், நடனம்- நோபல் பால், கலை-பிரபஞ்சன் என அனைவரது தொழில்நுட்ப கலைஞர்களின் பணியும் சிறப்பாக உள்ளது .
குழந்தை கடத்தலை மையமாக கொண்ட கதையுடன் கடத்தப்படும் குழந்தைகளின் நிலை என்ன?, கடத்தப்படும் குழந்தைகள் மீட்கப்படுகிறார்களா? இல்லையா ? என்பதை விறு விறுப்பான திரைக்கதைஅமைப்புடன் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் என்பதை வலியுறுத்தி தமிழ் வைத்தியத்தின் மகத்துவத்தையும் கதையுடன் பயணிக்கும்படி காட்சிகள் அமைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சித்த மருத்துவர் கே.வீரபாபு .
ரேட்டிங் ; 3 / 5
Comments