'சிக்லெட்ஸ்' - விமர்சனம்
- mediatalks001
- Feb 3, 2024
- 1 min read
பள்ளி பருவ காலம் முதல் மஞ்சிரா, நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர் மூவரும் ஒன்றாக படித்ததால் நட்புடன் இருக்கின்றனர் . பள்ளி படிப்பை முடித்ததும் கல்லூரி படிப்பை தொடர கல்லூரியிலும் இவர்களது தோழமை தொடர்கிறது .அதுமட்டுமல்லாமல் வயது கோளாறு காரணமாக காதல் டேட்டிங் என தனக்கு பிடித்த மாணவர்களுடன் உல்லாசமாக சுற்றித் திரிகின்றனர்.
ஆனால், இந்த விஷயம் அவர்களின் பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்கின்றனர்.ஒரு நாள் பார்ட்டியில் பங்குபெறுவதற்காக தங்கள் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு மூவரும் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க காரில் பயணப்படுகின்றனர்.
ஒரு கட்டத்தில் இவர்களது விவகாரம் பெற்றோருக்கு தெரிய வருகிறது. உண்மையை தெரிந்து கொண்ட பெற்றோர்கள் அவர்களை காப்பாற்ற பின் தொடர்கின்றனர்
முடிவில் உண்மை தெரிந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் 'சிக்லெட்ஸ்'
முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் கதையுடன் இணைந்து இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளனர் .வயது கோளாறில் தாறுமாறாக வாழ நினைக்கும் மூவரும் பேசும் வசனங்களில் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள், உடல் மொழியில் கவர்ச்சி என படம் முழுவதும் இளசுகள் கொண்டாடுமளவில் அழகாக கதையை நகர்த்திச் செல்கிறார் இயக்குனர் முத்து.
மூன்று பெண்களை காதலிக்கும் இளைஞர்களாக நடிக்கும் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
மூன்று பெண்களின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் நடிப்பில் பக்க பலமாக இருக்கின்றனர் .
ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவும் ,பால முரளி இசையும் கதைக்கு பக்க பலம் .
இன்றைய இளைய தலைமுறையினர் வயது கோளாறில் காதலிலும் காமத்திலும் சிக்கி சில சமயங்களில் போதைக்கு அடிமையாகி வாழும் வாழ்க்கையை அழித்து கொள்வதை பெற்றோர்களும் படம் பார்க்கும் ரசிகர்களும் சிந்திக்கும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் முத்து.
ரேட்டிங் ; 3.5 / 5
Comments