top of page
mediatalks001

'வடக்குப்பட்டி ராமசாமி' விமர்சனம் 4 / 5



வடக்குப்பட்டி கிராமத்தில் சிறுவனாக பானை வியாபாரம் தொழில் செய்யும் சந்தானம் குடும்ப சூழலினால் பண பற்றாக்குறை காரணமாக கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வருகிறார்

அவர் வசிக்கும் கிராமத்தில் மக்கள் இரவு நேரத்தில் காட்டேரியாக சுற்றும் ஒருவனை கண்டு பயந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஒரு திருடன் சாமி நகைகளை திருடி கொண்டு சந்தானத்தின் வீட்டில் உள்ள பெரிய பானையை எடுத்து கொண்டு ஓடும்போது ,,,அந்த திருடன் பானையை ஒரு மரத்தின் கீழே நகைகளுடன் புதைத்து விட்டு அதன் மேல் பெரிய கல்லை வைத்து ஒடி விடுகிறான்.

இச் சமயத்தில் காட்டேரி மனிதனை கிராம மக்கள் துரத்த சந்தானம் செய்த திருடன் புதைத்து வைத்த பானையால் கிராம மக்கள் அஞ்சி நடுங்கிய காட்டேரி மனிதன் வைக்கோல் போரில் தீயாக கருகுகிறான் .

உடனே கிராம மக்கள் அந்த பானையை அம்மன் கடவுளாக வணங்க தொடங்குகின்றனர்.

இந்த சூழலை சரியாக பயன்படுத்தி கொள்ளும் சந்தானம் பானை அம்மன் எனும் மக்களின் நம்பிக்கையை கொண்டு வருமானம் பார்க்கிறார் .

இதனையடுத்து பானையை கடவுளாக மாற்றி அந்த கிராமத்தில் சந்தானம் கோவில் ஒன்றை கட்டுகிறார்

மேலும் கோவில் மூலம் சந்தானம் தனது வருமானத்தை அதிகப்படுத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மூலம் கல்லா கட்ட கிராம தாசில்தார் இயக்குனர் நடிகர் தமிழ் சந்தானத்தை வைத்து பேரம் பேசுகிறார் .

மக்களை இன்னும் அதிகமாக ஏமாற்றி அதிக பணம் சம்பாதிக்க திட்டம் கொடுக்கிறார். அதில் தனக்கு கமிஷன் தர வேண்டும் என்றும் தமிழ் கூறுகிறார்.

ஆனால், அதை தர மறுத்து அந்த திட்டத்தை தானே செயல்படுத்திக் கொள்வதாக கூறி விடுகிறார் சந்தானம்.

இதனால் கோபம் கொண்ட தமிழ், திட்டம் தீட்டி கலெக்டரின் ஒப்புதலோடு அரசின் சீலுடன் கோவிலை மூட வைக்கிறார்.

முடிவில் சாமர்த்தியமாக கலெக்டரின் அனுமதியுடன் மீண்டும் சந்தானம் கோவிலை திறந்தது எப்படி என்பதை சொல்லும் படம்தான் 'வடக்குப்பட்டி ராமசாமி '

கதையின் நாயகனாக சந்தானம் வழக்கமான பாணியில் காமெடி கலந்த நடிப்பில் ஜொலிக்கிறார் .

சந்தானத்துக்கு இணையாக மாறன்,,சேசுவின் காமெடி கலாட்டாக்களில் சிரிப்பில் திரையரங்கே அதிர்கிறது .

தாசில்தாராக நடிக்கும் தமிழ் ,எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், கூல் சுரேஷ், இட்ஸ் பிரசாந்த், ஜாக்குலின், கல்கி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்

நாயகியாக நடிக்கும் மேகா ஆகாஷ் கதைக்கேற்றபடி நடிப்பில் இயல்பு !

ஒளிப்பதிவாளர் தீபக்கின் ஒளிப்பதிவும் , ஷான் ரோல்டனின் படத்திற்கு பக்க பலம் .

கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகவாதி முடிவில் இறை சக்தியான கடவுளை நம்பும் கதையை வைத்து படம் முழுவதும் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்கும்படியான காட்சிகளுடன் குடும்பத்துடன் அனைவரும் தங்கள் பிரச்சனைகளை மறந்து சிரித்து மகிழும் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கார்த்திக் யோகி.


ரேட்டிங் ; 4 / 5

Comments


bottom of page