ஆறு வருடங்களாக நாயகன் மணிகண்டன் ஐடி கம்பெனியில் பணி புரியும் நாயகி ஸ்ரீ கௌரி பிரியாவை மனதார காதலிக்கிறார்.
இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடக்கிறது. டிசைனராக வேலை செய்யும் மணிகண்டன் ஒரு கட்டத்தில் உணவகம் வைக்கும் முயற்சியில் இறங்க இருக்கும் வேலையும் பறி போகிறது.
இதற்கிடையில் விரக்தியான வாழ்க்கையின் வலியை தன் காதலி மீது காண்பித்து அடிக்கடி போதையில் கோபமடையும் மணிகண்டன் பிரட்சனை ஓய்ந்தவுடன் மன்னிப்பு கேட்டு மீண்டும் சரணடைகிறார்.
இந்நிலையில் ஸ்ரீகௌரி பிரியா மணிகண்டனிடம் சொல்லாமல்
நண்பர்களுடன் வெளியூர் பயணம் ஜாலியாக செல்ல ஒரு கட்டத்தில் மணிகண்டனுக்கு உ ண்மை தெரிந்துவிடுகிறது.
மீண்டும் தொடர்ந்து போதையில் கோபமடைவதும் பின் மன்னிப்பு கேட்பதுமாக மனரீதியாக பிரச்சனை தொடர்வதால் காதலை வெறுத்து மணிகண்டனை பிரிந்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் ஸ்ரீ கௌரி பிரியா.
தாம்பத்திய உறவுடன் கலந்த காதல் வாழ்க்கையுடன் வாழ்ந்து வந்த மணிகண்டனால் காதல் முறிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் மீண்டும் காதலியை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார் மணிகண்டன்.
முடிவில் வழக்கம் போல் மணிகண்டனை மன்னித்து மீண்டும் காதல் வாழ்க்கையில் ஸ்ரீ கௌரி பிரியா இணைந்தாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘லவ்வர்
நாயகன் மணிகண்டன் வித்தியாசமான உணர்ச்சிமயமான நடிப்பில் காதல் ,கோபம் , விரக்தி என கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
கதையின்அழுத்தமான கதாபாத்திரமாக நாயகி ஸ்ரீ கௌரி பிரியா படம் முழுவதும் பாராட்டும்படி இயல்பாக நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .
பருத்தி வீரன் சரவணன், கீதா கைலாசம் ,கண்ணா ரவி, ஹரிஷ் குமார் என நடித்தவர்கள் நடிப்பு சிறப்பு .
ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் படத்திற்கு பக்க பலம் .
காதலித்து கொண்டிருக்கும் காதலர்களுக்கு காதல் என்றால் என்ன? புரிதல் இல்லாத அடக்கி ஆள நினைக்கும் காதலனால் காதலி படும் வேதனையான வலிகளை இயல்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் இயக்குனர் பிரபுராம் வியாஸ்.
ரேட்டிங் ; 3.5 / 5
Comments