top of page

‘இ-மெயில்’ - விமர்சனம்


மனோபாலா நடத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்கிறார் நாயகி ராகினி திவேதி .

சக நண்பிகளுடன் ஒரு குடியிருப்பில் வசிக்கும் ராகினி திவேதியின் அருகில் உள்ள குடியிருப்பில் நாயகன் முருகா அசோக் வசிக்கிறார் .

இந்நிலையில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் மனோபாலாவுக்கும் ராகினி திவேதிவுக்கும் ஏற்படும் பிரச்சனையால் மனோபாலா வேலை விட்டு விரட்டுகிறார் .

வேலையில்லாமல் தவிக்கும் ராகினி திவேதி முருகா அசோக்கிடம் தகுதிக்கேற்ற வேலை கேட்கிறார் .

இந்நேரத்தில் ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ள ராகினி திவேதிக்கு ஈமெயில் மூலமாக ஒரு வீடியோ கேமை தொடர்ந்து விளையாடினால் லட்ச கணக்கான பணம் சம்பாதிக்கலாம் என தகவல் வர அவரும் அந்த கேமை விளையாட அந்த தகவலின் படி அடிக்கடி கொரியரில் லட்ச கணக்கான பணம் அவருக்கு வருகிறது .

ஒரு கட்டத்தில் முருகா அசோக்கும் ராகினி திவேதியும் காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள்.

ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ள ராகினி திவேதிக்கு அதன் மூலமாகவே ஒரு பிரச்சனை வருகிறது.

அந்த கேமில் போக சொல்லும் இடத்திற்கு ராகினி திவேதி செல்லும் போது அங்கு ஒருவன் கொல்லப்பட்டு பிணமாக கிடக்கிறான் .

இந்நிலையில்ராகினி திவேதிக்கு திடீரென கணினி சம்பந்தமான ஹாட் டிஸ்க்ஹை நான் சொல்லும் இடத்திலிருந்து கொண்டு வந்து கொடுத்தால் நீ இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம் என மிரட்டலான போன் வருகிறது

அந்த பிரச்சனையில் இருந்து ராகினி திவேதியை காப்பாற்ற நினைக்கும் முருகா அசோக்கின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இதனால், தன் தோழிகளின் உதவியுடன் நேரடியாக ஹாட் டிஸ்க்ஹை எடுக்க அதிரடியாக களத்தில் இறங்குகிறார் நாயகி ராகினி திவேதி.

முடிவில் தன் திட்டப்படி வெற்றிகரமாக ஹாட் டிஸ்க்ஹை எடுத்து தன்னை மிரட்டிய மர்ம நபரிடம் ராகினி திவேதி கொடுத்தாரா ?

ராகினி திவேதியை போனில் தொடர்பு கொண்டு மிரட்டும் அந்த மர்ம நபர் யார் ? என்பதை சொல்லும் படம்தான் ‘இ-மெயில்’.

நாயகனாக நடிக்கும் முருகா அசோக் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும் ஆக்க்ஷன் காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது .

நாயகியாக நடிக்கும் ராகினி திவேதி இளமை துள்ளலான காதல் காட்சிகளிலும் சண்டைக்காட்சிகளில் அதிரடி நாயகியாக அசத்துகிறார் .

மனோபாலா ,ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்திஸ்ரீ , லொள்ளு சபா மனோகர் என நடித்த நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .

எம்.செல்வத்தின் ஒளிப்பதிவும், கவாஸ்கர் அவினாஷ் இசையும் , ஜுபினின் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் .

ஆன்லைன் விளையாட்டின் விபரீதமான ஆபத்தினை மையமாக கொண்டு திருப்பங்கள் கலந்த திரைக்கதை அமைப்புடன் ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கும் கதைகளத்துடன் விறு விறுப்பான க்ரைம் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன்.


ரேட்டிங் ; 3 / 5


Comments


bottom of page