top of page

’லால் சலாம்’ - விமர்சனம்




மூரார்பாத் கிராமத்தில் சகோதரர்களாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்ற இஸ்லாமியர் ரஜினிகாந்த் சிறிய அளவில் துணி வியாபாரம் செய்து பின்னாளில் உழைப்பால் அங்கு மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறார்.

இவரது மகன் விக்ராந்திற்கும் ரஜினியின் நண்பர் லிவிங்ஸ்டன் மகன் விஷ்ணு விஷாலும் சிறு வயதில் இருந்தே இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்

இருவரும் கிரிக்கெட் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் அதில் இருந்தே விக்ராந்த்திற்கும் விஷ்ணு விஷாலுக்கும் இடையே ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த கிரிக்கெட் வைத்து நடக்கும் போட்டியில் வில்லன் விவேக் பிரசன்னா திட்டப்படி ஒரு சிறிய பிரச்சனை இந்து – முஸ்லிம் மக்களிடையே பெரிய கலவரமாக வெடிக்கிறது.

இப் பிரச்சனையால் முரார்பாத் கிராமத்தில் நடைபெற இருந்த கிராம தெய்வத்தின் தேர் திருவிழா வில்லன் விவேக் பிரசன்னாவின் சதியின் காரணமாக போலீசாரால் நிறுத்தி வைக்கப்படுகிறது .

இதனால், இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டு கிராமமே இரண்டு பட்டு கிடக்கிறது


இந்நிலையில் வில்லன் விவேக் பிரசன்னா தங்கள் வம்சத்துக்கு சொந்தமான கோயில் தேரை எடுத்து சென்று திருவிழா நடக்காமல் பிரச்சனை செய்கிறார் . இந்நேரத்தில் தம்பி ராமையா தலைமையில் கிராம மக்கள் ஓன்று திரண்டு பணம் திரட்டி திருவிழாவுக்காக புதியதாக கோயில் தேரை வடிவமைக்கின்றனர் .

இதனால் ஆத்திரமடையும் விவேக் பிரசன்னா புதிய தேரை தீயிட்டு கொளுத்துகிறார் .

புதிய தேர் தீ யால் எரிவதை பார்த்து கிராம மக்கள் அனைவரும் கொதிப்படைந்த நிலையில் முடிவில் திட்டமிட்டபடி தேர்த் திருவிழா கிராமத்தில் நடந்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’லால் சலாம்’

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் படத்தை தாங்கி பிடித்துள்ளார்.

இடைவேளைக்கு பின் திரைக்கதைக்கு பக்க பலமாக அவர் வரும் காட்சிகள் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் மதத்தின் மூலம் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு எதிராகவும், இஸ்லாமிய-இந்து ஒற்றுமைக்கு ஆதரவாகவும் ரஜினிகாந்த் பேசும் வசனங்கள் கைதட்டல் பெறுகிறது.


விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். விஷ்ணு விஷால் நடிப்பதற்கு ஏராளமான காட்சிகள். விக்ராந்திற்கு, குறைவான காட்சிகளே கிடைத்திருக்கிறது. இருவரும் தங்களது கதாபாத்திரத்தினை உணர்ந்து, நடித்துள்ளனர்

நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ராந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் திறமையாக நடித்து பாராட்டு பெறுகிறார்.

நாயகியாக நடிக்கும் அனந்திகா சனில்குமாருக்கு குறைவான காட்சிகள் இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.

விஷ்ணு விஷாலின் அம்மாவாக நடித்திருக்கும் ஜீவிதா, செந்தில், கே.எஸ்.ரவிக்குமார்,லிவிங்ஸ்டன்,நிரோஷா,தம்பி ராமையா

ஆதித்ய மேனன்,விவேக் பிரசன்னா,தன்யா பாலகிருஷ்ணா,தங்கதுரை

, மூணார் ரமேஷ், நந்து உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் பின்னணி இசை மிரட்டல் .

ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி இயல்பான ஒளிப்பதிவில் கிரிக்கெட் போட்டியையும் அங்கு நடக்கும் கோவில் திருவிழாவையும் காட்சிகளில் அசத்தியுள்ளார் .


ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களை பிளவுப்படுத்த நினைக்கும் சூழ்ச்சியை ஒரு இஸ்லாமியர் முறியடித்து மத நம்பிக்கை அடிப்படையில் அனைவரும் வேறுபட்டாலும் உடலால் நாம் ஒன்றுதான் என மக்கள் ஒற்றுமையை அழுத்தமாக சொல்வதுடன் சில காட்சிகளில் குறை இருந்தாலும் இதுவரை ரஜினிகாந்த் நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து ரசிகர்கள் பாராட்டை பெறுமளவில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.


ரேட்டிங் ; 3 / 5

Comments


bottom of page