மிதுன் மித்ரா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரிப்பில் ஷெரீப் இயக்கத்தில் வைபவ் நாயகனாக நடிக்கும் ’ரணம்’
தன்யா ஹோப், சரஸ் மேனன்,நந்திதா ஸ்வேதா , சுரேஷ் சக்ரவர்த்தி, ப்ரனீதி, டார்லிங் மதன் ஆகியோர் நடித்துள்ளனர் .
காவல் துறையில் கொலை செய்யப்பட்ட அடையாளம் காண முடியாத பிணங்களின் முகத்தை கண்டுபிடிக்க முக சீரமைப்பு வரை பட கலைஞராக பிணத்தின் முகத்தை தத்ரூபமாக வரைவதில் கில்லாடியாக சில சமயங்களில் போலீசாருக்கு உதவியாக இருக்கிறார் வைபவ் .
சில வருடங்களுக்கு முன் சினிமாவில் உதவி இயக்குனராக பணி புரிந்து கொண்டிருக்கும்போது அங்கு மற்றொரு உதவி இயக்குனராக பணி புரியும் சரஸ்மேனனை காதலிக்கிறார்.
ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.ஒருநாள்தனது காதல் மனைவியுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தினால் சரஸ்மேனன் மரணமடைகிறார் .
இதனால் வாழ்க்கையை வெறுத்து விரக்தியில் வாழ்ந்து வருகிறார்
இதனையடுத்து வைபவ். சினிமா தொழிலை விட்டு காவல்துறைக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார்.
அடையாளம் காண முடியாத பிணத்தின் முகத்தை தத்ரூபமாக இவர் வரைவதால் வழக்கை விரைவாக முடிப்பதற்கு இவரது படங்கள் உதவியாக இருக்கிறது
சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் கிடைக்கும் அட்டை பெட்டிகளில் எரிந்த நிலையில் உடல் பாகங்கள் காவல் நிலையம் அருகே கிடைக்கிறது.
இறந்தவர் யார்? என்று தெரியாமல் திணறும் காவல்துறைக்கு வைபவ் உதவி செய்கிறார்.
இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போக, வழக்கை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டரான தான்யா ஹோப்க்கு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன.
முடிவில் மர்மமான முறையில் இந்த கொலைகளை செய்தது யார்?
அட்டை பெட்டிகளில் எரிந்த நிலையில் உடல் பாகங்கள்
காவல் நிலையம் அருகே வைப்பதற்கான காரணம் என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ’ரணம்’
நாயகனாக நடிக்கும் வைபவ் இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் சால்ட் பெப்பர் லுக்கில் கதைக்கேற்ற கதாநாயகனாக தோன்றி சீரியஸ் ஆக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தன்யா ஹோப் காக்கி உடையில் மட்டும் கம்பீரமாக இருக்கிறார் .
வைபவின் காதலியாக நடித்திருக்கும் சரஸ் மேனன், குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்.
கதையின் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் நந்திதா ஸ்வேதா சிறுமியின் தாயாக நடித்து அசத்தி இருக்கிறார்.
அரோல் கொரோலியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை மிரட்டல்.
பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .
இறந்து போன பெண்களுடன் உடலுறவு கொள்ளும் மனித மிருகங்களை பற்றிய கதையை மையமாக வைத்து வித்தியாசமான முறையில் எல்லா குற்றங்களுக்கும் தண்டனை இருப்பது போல இறந்து போன பெண்களுடன் உறவு கொள்ளும் மனித மிருகம் செய்யும் பாலியல் குற்றத்திற்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்தை அழுத்தமாக சொல்வதுடன் எதிர்பாராத திருப்பங்களாக இறுதியில் வரும் காட்சிகளுடன் அனைவரும் ரசிக்கும் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ஷெரிஃப்.
ரேட்டிங் ; 3. / 5
Comments