மாயாஜால மேஜிக் கலைஞராக இருக்கும் நாயகன் சதீஷ் எப்படிப்பட்டபொருளாக இருந்தாலும் சரி அதை தனது திறமையாலும்
புத்திசாலி தனத்தாலும் அந்த பொருளை திருடுவதில் திறன் படைத்தவர்
ஆனந்தராஜ் ,சுப்ரமணிய சிவா, மதுசூதனன் ராவ் என மூன்று பேரும் கடத்தல் தொழிலில் ஒரு காலத்தில் ஒன்றாக தொழில் செய்து வருகிறார்கள்..
காலப்போக்கில் மூவரும் பிரிந்து தனித்தனியாக கடத்தல் தொழில் செய்து வருகிறார்கள்.
நாயகன் சதிஷ் திறமையை கண்ட ஆனந்தராஜ் அவருடன் இணைந்து தங்க கடத்தல் செய்ய அந்த தங்கம் காணாமல் போகிறது.
இதனையடுத்து மதுசூதன ராவ் 25 கோடி மதிப்புள்ள வைரத்தை விமான நிலையத்தில் கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார் .
கோடி மதிப்புள்ள வைரத்தை மதுசூதன ராவ் கடத்துவதை சதீஷ் தெரிந்துக் கொள்கிறார்.
இதை ஆனந்தராஜ் கும்பலுடன் சேர்ந்து வைரத்தை அபேஸ் பண்ண திட்டம் போடுகிறார் சதீஷ்.
முடிவில் வைரத்தை ஆனந்தராஜ் கும்பலுடன் சேர்ந்து சதீஷ் கொள்ளை அடித்தாரா? கொள்ளை சம்பவத்தில் சதீஷ் ஈடுபடுவதற்கான காரணம் என்ன? என்பதை சொல்லும் படம்தான் 'வித்தைக்காரன்'
நாயகனாக நடித்திருக்கும் சதீஷ் கதைக்கேற்றபடி வழக்கமான பாணியில் நடித்திருந்தாலும் காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைத்க முயற்சி செய்திருக்கிறார்.
நாயகி சிம்ரன் குப்தா, பத்திரிகை நிருபராக நடித்து ரசிகர்களை கவர்கிறார்.
டாலர் அழகு என்ற காமெடி கலந்த வில்லனாக ஆனந்தராஜ், சுப்பிரமணி சிவா, மதுசூதன ராவ், ஜான் விஜய், பாவேல் நவகீதன், ஜப்பான் குமார், சாம்ஸ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் போட்டி போட்டு சிறப்பான நடிப்பில் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் விபிஆர் இசையும் , கார்த்திக்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கி.
முதல் பாதியில் படத்தை கொள்ளை சம்பவங்கள் மூலம் விறு விறுப்பாக செல்லும் காட்சிகள். இரண்டாம் பாதியில் விமான நிலையத்தில் சுவாரஸ்யம் இல்லாத பெரும்பாலான காட்சிகள் .
கதைக்கேற்றபடி சதீஷ் மேஜிக் கலைஞர் என்று சொல்லும்போது மேஜிக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாதது ஏனோ ??
மேஜிக் காட்சிகள் ரசிக்கும்படி சில இடங்களில் இணைத்திருந்தால் காட்சிகளில் இன்னும் விறு விறுப்பு கூடியிருக்கும்.
ரேட்டிங் ; 3 / 5
Comments