top of page
mediatalks001

மிரள வைக்கும் திரைக்கதை அமைப்பில் அசர வைக்கும் கதைக்களம் ’பைரி’ - விமர்சனம்










கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியில் வாழும் சையத் மஜித் பந்தய புறா வளர்ப்பில் ஆர்வம் மிக்க இளைஞனாக வாழ்ந்து வருகிறார் . சையத் மஜித் புறா வளர்ப்பது அவரது அம்மா விஜி சேகருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை . தன் மகன் படித்தால் நல்ல நிலைக்கு வருவான் என சையத் மஜித்தை இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்க வைக்கிறார் அவரது அம்மா .. இந்நிலையில் முறைப்பெண் சரண்யா சையத் மஜித் மீது காதல் கொள்கிறார் .. ஆனால் கல்லூரியில் தன்னுடன் படித்த மேக்னா மீது காதல் கொள்கிறார் சையத் மஜித் .

இதற்கிடையே தன் தந்தையை போல புறா பந்தயத்தின் மீது ஆசை கொண்ட சையத் மஜித் புறா பந்தயத்தில் கலந்து கொண்டு தான் வளர்த்த புறாக்களை பறக்க விட ஆசைப்படுகிறார்.

மற்றொரு பக்கம் தனது பகுதி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்அவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் மதிப்பளிக்கும் தலைமையில் பண்ணையாராக வலம் வருகிறார் ரமேஷ் ஆறுமுகம்.

நாட்கள் செல்ல செல்ல ஒரு கட்டத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் புறா பந்தயத்திற்கான நாள் நெருங்குகிறது.

அம்மாவின் எதிர்ப்பையும் மீறி புறா பந்தயத்தில் கலந்து கொள்கிறார் சையத் மஜித்.

அதேசமயம் ஊரில் சில பல கொலைகளை செய்து பிரபல தாதாவாக இருக்கும் வினு லாரன்ஸ்ம் புறா பந்தயத்தில் கலந்து கொள்கிறார்.

வினு லாரன்ஸின் புறா பந்தயத்தில் முறை கேடான மோசடி நடக்க நேரடியாகவே சையத் மஜித்திற்கும் வினு லாரன்ஸ்க்கும் மோதல் ஏற்படுகிறது.

இருவருக்குமான புறா பந்தய மோதல் கொலை வெறியாக மாற அதனால் ஏற்படும் மோதலில் வெற்றி பெற்றது நாயகனான சையத் மஜித்தா? அல்லது மிரட்டலான வில்லன் வினு லாரன்ஸா என்பதை சொல்லும் படம்தான் ’பைரி’


நாயகனாக சையத் மஜித்,,,,, கோபம் , வேகம், சுறுசுறுப்பு, எமோஷன்ஸ், காதல், செண்டிமெண்ட் என பல பரிணாமங்களில் பாராட்டும்படி இயல்பான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .


நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சேகர், மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதம் குணசித்திர நடிகையாக படம் முழுவதும் வாழ்கிறார் .


நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் இயக்குநர் ஜான் கிளாடி, நாயகிகளாக நடிக்கும் சரண்யா ரவிச்சந்திரன், மேக்னா எலன் . ரமேஷ் பண்ணையாராக நடித்திருந்த ரமேஷ் ஆறுமுகம், சுயம்பு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினு லாரன்ஸ் என அனைவருமே போட்டி போட்டு நடிப்பில் மிரட்டுகின்றனர் .

அருண் ராஜின் இசையும் ,ஏ.வி.வசந்தகுமாரின் ஒளிப்பதிவும் கதையின் வேகத்திற்கு இணையாக பக்க பலமாய் இருக்கின்றது


நாகர்கோவில் மக்களின் வாழ்வியலுடன் புறா பந்தயத்தைப் பற்றிய புதிய கதை களத்தில் விறு விறுப்பான மிரள வைக்கும் திரைக்கதை அமைப்புடன் நடிப்பவர்கள் புதுமுகங்களாக இருந்தாலும், அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்வதுபோல்,,, கதையுடன் பயணிக்கும் அத்தனை நடிகர்களுக்கும் முக்கியத் துவம் கொடுத்து மிக தரமான படமாக அனைவரும் பாராட்டும்படி திறமையாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஜான் கிளாடி.


ரேட்டிங் : 3.5 / 5

Comments


bottom of page