2k கிட்ஸ் இளைஞரான மதுரை மாவட்டத்தை சேர்ந்த நாயகன் செந்தூர் பாண்டியன் படிப்பை முடித்து எந்த வேலைக்கும் செல்லாமல் இணைய தள பேஸ் புக் மூலம் பெண்களை வலையில் விழ வைத்து சினிமாவுக்கு செல்வதும் தனியாக அழைத்து சென்று காம களியாட்டத்தில் ஈடுபடுவதை வேலையாக கொண்டிருக்கிறார்.
இந்நேரத்தில் மாயவரத்தில் வசிக்கும் நாயகி ப்ரீத்தி கரணுடன் பேஸ் புக் மூலமாக செந்தூர்பாண்டியனுக்கு நட்பு ஏற்படுகிறது.
நாயகி ப்ரீத்தி கரணுக்கு பிறந்தநாள் என்பதால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க நினைக்கும் நாயகன் செந்தூர் பாண்டியன் தனது நண்பனுடன் பைக்கில் மதுரையில் இருந்து மாயவரத்திற்குச் செல்கிறார்.
இதை சற்றும் எதிர்பாராத நாயகி ப்ரீத்தி கரண் வேறு வழியின்றி செந்தூர் பாண்டியனுடன் மாயவரத்தில் இருந்து பூம்புகாருக்கு பைக்கில் செல்கிறார்.
இருவரும் பைக்கில் சுற்றிக் கொண்டு பூம்புகார் கடற்கரைக்கு செல்கின்றனர் . தனது பிறந்தநாளுக்கு என்ன கிப்ட் கொண்டு வந்தாய் என் ப்ரீத்தி கரண் கேட்க திடீரென கட்டி பிடித்து ப்ரீத்தி கரணை முத்தமிடுகிறார் செந்தூர் பாண்டியன்.
முடிவில் செந்தூர் பாண்டியன் ப்ரீத்தி கரணை தன் வலையில் விழ வைத்து தான் நினைத்த செயலை செய்து முடித்தாரா ?
ப்ரீத்தி கரணின் முழு சம்மதத்துடன் செய்ய நினைத்த செயலை செந்தூர் பாண்டியன் செய்து முடித்தாரா ? இல்லையா ?என்பதை சொல்லும் படம்தான் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’
கதையின் நாயகனாக நடிக்கும் செந்தூர் பாண்டியன் எப்பொழுதும் இணைய தள பேஸ் புக்கில் சிக்கும் பெண்களை வசிய பேச்சால் மயக்கும் இளைஞனாக நடிப்பில் இயல்பாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி ப்ரீத்தி கரண் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
செந்தூர் பாண்டியனின் நண்பனாக வரும் சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி என மற்ற வேடத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்
பிரதீப் குமாரின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இனிமையாகவும் அதே நேரத்தில் பின்னணி இசை கதைக்கு பக்க பலமாக உள்ளது.
உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு சாலை பயணத்திற்கு ரசிகர்களையும் அழைத்து செல்கிறது.
இன்றைய இளைஞர்கள் பழகும் அனைத்து பெண்களையும் தவறான நோக்கில் பார்ப்பதை எச்சரிக்கும் விதத்தில் நேர்த்தியான திரைக்கதையோடு சமூக நலன் மீது அக்கறை கொண்ட அழுத்தமான கருத்துடன் அனைவரும் ரசிக்கும் படமாக படத்தினை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரசாத் ராமர்
ரேட்டிங் ; 3 / 5
Comments