top of page

'அரிமாபட்டி சக்திவேல்’ - விமர்சனம்


திருச்சியில் உள்ள அரிமாபட்டி கிராம மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாட்டை வகுத்து அந்த ஊரில் வாழும் ஒருவன் காதல் திருமணமோ அல்லது வேறு சாதியிலோ திருமணம் செய்யக் கூடாது. அப்படி செய்தால், அவர்கள் பஞ்சாயத்தை கூட்டி ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதோடு எந்த ஒரு சூழ்நிலையிலும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.

இந்நிலையில் அதே கிராமத்தில் வாழும் சினிமாவில் உதவி இயக்குனராக வேலை செய்யும் நாயகன் பவன் வேறு ஜாதி பெண்ணான மேகனா எலனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கட்டுப்பாட்டுக்கு பெயர் பெற்ற அரிமாபட்டி கிராம பஞ்சாயத்தார் பவனின் தந்தையான சார்லியிடம் பவனை குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைத்து அவரிடம் எந்த வித குடும்ப உறவே இல்லாமல் வாழ முடிவான தீர்ப்பை சொல்கின்றனர் . முடிவில் கிராம மக்கள் பவனின் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்களா? தந்தையான சார்லி பவனையும் அவரது காதல் மனைவியான மேகனா எலனையும் அரவணைத்து தன் குடும்பத்தில் இணைத்து கொண்டாரா ? என்பதை சொல்லும் படம்தான் 'அரிமாபட்டி சக்திவேல்’

சக்திவேல் கதாபாத்திரத்தில் நடிக்கும் பவன் கதையுடன் இணைந்து காதல், உணர்ச்சிமயம் ,சண்டை காட்சி என அனைத்தையும் கவனமாக நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் .

நாயகியாக நடித்திருக்கும் மேக்னா எலன் இயல்பான நடிப்பில் பாடல் காட்சிகளில் இளசுகளை சூடேற்றுகிறார் .

வெகுளித்தனமான நடித்திருக்கும் சார்லி தனது அனுபவ நடிப்பை வழங்கி இருக்கிறார்.

நாயகனின் தாத்தாவாக நடித்த அழகு, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, சேதுபதி ஜெயசந்திரன் என மற்ற வேடங்களில் நடித்தவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

மணி அமுதவன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம், பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது.

ஜேபி மேன் ஒளிப்பதிவில் கிராமத்தின் இயற்கை அழகை கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார்/


உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையுடன் சாதி , காதல் ,கிராம மக்கள் எதிர்ப்பு என சமூக பிரச்சனைகளை நேர்த்தியான திரைக்கதையில் விஞ்ஞான வளர்ச்சியில் உலகமே வாழ்ந்தாலும் சாதி பார்க்கும் சமுதாயம் ஒரு கிராமத்தில் இருப்பதை இயல்பாக காட்சிகளுடன் அனைவரும் ரசிக்கும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ரமேஷ் கந்தசாமி


ரேட்டிங் : 3 / 5

Comments


bottom of page