நாயகன் விஷ்வக் சென் சிவனடி அகோரியாக வாழ்ந்து வருகிறார் . இந்நிலையில் மனிதர்கள் அவரை தொடும்போது நரம்பு புடைத்து உடல் முழுவதுமாக மாறி மயங்கி விழும் அபூர்வமான நோய் அவருக்கு உள்ளது .
அந்நோயைத் தீர்க்கும் அரியவகைக் காளான் இமயமலைப்பகுதியில் இருக்கிறதென்பதை தெரிந்து கொண்ட நாயகன் விஸ்வக் சென் காளான் பற்றி ஆய்வு செய்யும் மருத்துவர் சாந்தினி செளத்ரியுடன் இணைந்து அந்த அரிய வகை காளானை தேடி இமயமலைக்கு செல்கிறார் .
இந்த அரியவகை காளான் இமயமலைப் பகுதியில் 36 வருடங்களுக்கு ஒரு முறை வளரும்.
இந்த காளான் வளர்ந்த 24 மணி நேரத்தில் அழிந்துவிட கூடியது.
மற்றொரு பக்கம் சட்ட விரோதமான ஆராய்ச்சிக் கூடத்தில் இளைஞர் முகமது சமத்திற்கு கரண்ட் ஷாக் கொடுத்து ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். இந்த கொடுமையில் இருந்து தப்பி செல்ல அந்த இளைஞன் பல முயற்சிகள் மேற்கொள்கிறான்.
மறுபுறம் ஆந்திராவில் தேவதாசி கலாச்சாரம் உள்ள கிராமத்தில் தேவதாசியாக இருக்கும் அபிநயா நோய் வாய் பட்டு இறந்துவிட,,,, அவரது மகள் சிறுமி ஹரிகா பெட்டாவை அந்த கிராம மக்கள் தேவதாசியாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்.
இந்த மூன்று பக்கம் நடக்கும் கதைகள் ஒரு இடத்தில் ஒன்று சேருகிறது.
முடிவில் நாயகன் விஸ்வக் சென் இமயமலைப் பகுதியில் உள்ள ஆபத்தான பல தடைகளை கடந்து அந்த அரிய வகை காளானை எடுத்தாரா? இல்லையா? என்பதை சொல்லும் தெலுங்கு படம் தான் ’காமி’
அகோரியாக நடித்திருக்கும் நாயகன் விஷ்வக் சென் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாந்தினி சௌத்ரி கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
தேவதாசியாக வரும் அபிநயா அமைதியான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
சிறுமியாக நடித்த ஹரிகா பெட்டாவின் நடிப்பும் பாராட்டும்விதமாக இருந்தது.
மருத்துவ சித்ரவதைக் கூடத்தில் இருந்து தப்பிக்க முயலும் இளைஞனாக வரும் முகமது சமத் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளனர்.
இசையமைப்பாளர் ஸ்வீகர் அகஸ்தியின் பாடல்கள் கேட்பதற்கு இனிமை, நரேஷ் குமரனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.
விஸ்வந்த் ரெட்டி ஒளிப்பதிவில் இமயமலையின் இயற்கை அழகை மிக சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டும்படி இருக்கிறது .
மூன்று கதைகளை மையப்படுத்தி வித்தியாசமான படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வித்யாதர் காகிடா .
சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் தத்ரூபமான இமயமலை சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய விதத்தில் ரசிகர்களிடையே பாராட்டை பெறுகிறார் இயக்குனர் .
ரேட்டிங் ; 3.5
Comments