top of page

‘அமீகோ கேரேஜ்’ - விமர்சனம்

mediatalks001


பள்ளியில் படிக்கும் மாணவனான மாஸ்டர் மகேந்திரன் நண்பர்களுடன் ஜாலியாக புகையுடன் சேர்ந்த குடி பழக்கம் என பள்ளி வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார் . இந்நிலையில் பள்ளியில் இவர் செய்யும் சேட்டைகளால் ஆசிரியர் மகேந்திரனையும் அவரது நண்பர்களையும் அடித்து விட அதே பகுதியில் அமீகோ கேரேஜ் நடத்தி வரும் ஜி.எம்.சுந்தரிடம் தன் பிரச்சனையை மாஸ்டர் மகேந்திரன் சொல்ல ஜி.எம்.சுந்தர் அந்த ஆசிரியரை தூக்கி வந்து அடிக்கிறார்.

அதன்பின்   ஜி.எம்.சுந்தருடன் நெருங்கி பழக வாய்ப்பு ஏற்படுகிறது. கல்லூரி வாழ்க்கை முடித்து, நல்ல வேலையுடன்

வாழ்ந்து வரும் நிலையில் அங்கே வேலை செய்யும் திருமணமாகி கணவரை இழந்த அதிராவை காதலிக்கிறார் .

அந்த ஏரியாவில் மிகப் பெரிய தாதாவாக இருக்கும் முரளிதரன் சந்திரனுக்கு அடியாளாக இருக்கும் தசரதி ,,,, மது போதையில் மாஸ்டர் மகேந்திரனை கெட்ட வார்த்தையால் திட்டி விட .இதனால் கோபம் கொள்ளும் மாஸ்டர் மகேந்திரன் தசரதியை அடித்து விடுகிறார்.

இதனால் வெறியாகும் தசரதி மாஸ்டர் மகேந்திரனை கொலை செய்ய தாதா முரளிதரன் சந்திரன் மூலம் பழிவாங்க கொலை திட்டம் போடுகிறார். முடிவில் தசரதி திட்டமிட்டபடி மாஸ்டர் மகேந்திரனை பழிவாங்க கொலை செய்தாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘அமீகோ கேரேஜ்’

கதையின் நாயகனாக நடிக்கும் மாஸ்டர் மகேந்திரன், .காதல்,ஆக்க்ஷன்,செண்டிமெண்ட் ,பள்ளி மாணவன் , இளைஞர்,ரௌடி என பல பரிணாமங்களில் அனுபவ நடிகராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

நாயகியாக நடித்திருக்கும் அதிரா கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பில் நடிக்கிறார் .

அமீகோ கேரேஜின் உரிமையாளரான ஜி.எம்.சுந்தர்,,, வில்லன்களாக நடிக்கும் தாசரதி , முரளிதரன் சந்திரன் சிறப்பான நடிப்பில் மிரட்டுகின்றனர் .

இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் பின்னணி இசை படத்திற்கு பக்க பலம்.

சோலைமுத்துவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .

எதை பற்றியும் யோசிக்காமல் திடீரென எடுக்கும் முடிவால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஒருவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை அழுத்தமான கதையாக சொல்வதுடன் ஆக்க்ஷன் பிரியர்கள் விரும்பும் பக்கா கமர்ஷியல் ஆக்க்ஷன் படமாக படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பிரசாந்த் நாகராஜன்.


ரேட்டிங் ; 3. / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page