முஸ்லீம் நாடான அரபு நாட்டுக்கு பிழைப்பிற்காகநாயகன் பிரித்வி ராஜ் மற்றும் கோகுல் இருவரும் செல்கின்றனர்.
கர்ப்பமாக இருக்கும் மனைவியான அமலாபாலை விட்டு பணம் சம்பாதிக்க செல்கிறார் சந்தோஷமாக நாயகன் பிருத்விராஜ்.
நாட்டில் இறங்கியதும் தன்னை அழைத்துச் செல்ல வேண்டிய ஏஜெண்ட் வராததால், தவறான ஏஜெண்ட் உடன் சென்று பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் பணியில் அமர்த்தப்படுகிறார்.
புரியாத மொழி, எதிர்பார்க்காத வேலை என்று தடுமாறும் பிரித்விராஜ், சில நாட்கள் கழித்தே தான் பாலைவனத்தில் ஆடு மேய்க்க அடிமையாக்கப்பட்டதை அறிந்துக்கொள்கிறார்.
பிறகு அந்த வேலைக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்பவர் திடீரென்று ஒரு நாள் தனது முகத்தை. நீண்ட தலைமுடியுடனும் சவரம் செய்யாத தாடியுடனும் இருப்பதை கண்ணாடியில் பார்த்து பதறிப்போகிறார்.
பல வருடங்கள் இந்த ஊரில் இருப்பதை உணர்பவர் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சி தோல்வியில் முடிய, இது தான் தனது வாழ்க்கை என்று முடிவு செய்துக்கொண்டு வாழ்பவருக்கு மீண்டும் தப்பிப்பதற்காக ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது.
ஒருகட்டத்தில் கோகுலும் பிரித்விராஜும் சந்தித்துக் கொள்ள அங்கிருந்து தப்பிக்க உடனிருக்கும் ஆப்ரிக்க நபரான ஜிம்மி ஜூன் லூயிஸின் உதவியோடு திட்டம் போடுகின்றனர் .
பாலைவனத்தை விட்டு எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவில் பாலைவனத்தை கடக்க மூவரும் முயற்சிக்கின்றனர்.
கடும் வெயிலில் மரணத்தோடு போராடி கொண்டு பாலைவனத்தில் பயணப்படும் மூவரும் நரகத்தை விட்டு உயிருடன் தப்பித்தார்களா ? இல்லையா? என்பதை ஒரு மனிதனின் வாழ்க்கையை ஜீவனுள்ள கதையாக சொல்லும் படம்தான் ‘தி கோட் லைஃப் - ஆடுஜீவிதம்’.
நாயகனாக நடித்கும் பிரித்விராஜின் கடுமையான உழைப்பு அவரது உடலிலும், நடிப்பிலும் தெரிகிறது. ஆஜானுபாகுவான உடலமைப்போடு அறிமுகம் ஆகிறவர், பாலைவன வாழ்க்கைக்குப் பிறகு ஒட்டிய வயிறு, எலும்புகள் தெரியும் உடலமைப்பு என கண்டிப்பாக சிறந்த நடிகருக்கான விருதை பெறுமளவில் நஜீம் கதாபாத்திரமாகவே சிறப்பான நடிப்பில் வாழ்கிறார் .
நீண்ட இடைவெளிக்குப் பின் அழகிலும், நடிப்பிலும் ஜொலிக்கும் அமலா பால்
பிரித்விராஜ் உடன் சவுதிக்கு சென்று பாலைவனத்தில் கஷ்டப்படும் கே.ஆர்.கோகுல், பிரித்விராஜை காப்பாற்ற முயற்சிக்கும் ஆப்பிரிக்க அடிமையாக நடித்திருக்கும் ஜிம்மி ஜூன் லூயிஸ், ஆட்டு மந்தையின் முதலாளியாக நடித்திருக்கும் அரபு நாட்டுக்காரர் என படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதைக்கு பக்க பலமாக இருக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், ஒளிப்பதிவாளர் சுனில்.கே.எஸ், ஒளிப்பதிவும் கதையின் தூண்களாக துணை நிற்கின்றனர் .
ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக ஒரு மனிதனின் வலி நிறைந்த வாழ்வியலை படம் பார்க்கும் அனைவரது கண்கள் கலங்குமளவில் மிக சிறப்பாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிளஸ்ஸி.
ரேட்டிங் ; 4 / 5
Comments