வித்தியாசமான புதுமையான கதையை எதிர்பார்க்கும் தயாரிப்பாளர் கதை சொல்ல வரும் இயக்குநரிடம் பத்து நிமிடங்கள் மட்டுமே கொடுக்கிறார். அதற்குள் கதை சொல்லி தயாரிப்பாளரை கவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இயக்குநர் நான்கு கதைகளை சொல்கிறார் .
முதல் கதையில் காதலர்களாக ஆதித்யா பாஸ்கர் – , கௌரி கிஷன் இருக்கும் நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமண நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.. ஆனால் அந்த திருமணத்தில் புதுமையான வித்தியாசம் என்னவென்றால் மணமகன் ஆதித்யா பாஸ்கர் கழுத்தில் மணமகள் கௌரி கிஷன் தாலி கட்டி திருமணம் அனைவரது மத்தியில் நடைபெறுகிறது. மணமகள் வீட்டிற்கு தாலி கட்டிக் கொண்டு மணமகன் ஆதித்யா வருகிறார். சில நாட்கள் கடந்த நிலையில் ஆதித்யா பாஸ்கருக்கு அவரது மாமனாருக்கும் தினந்தோறும் சண்டை நடக்கிறது. அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் முதல்கதை
இரண்டாவது கதையில் சாண்டி மாஸ்டரும், அம்மு அபிராமியும் ஒருவரை ஒருவர் காதலிக்க அம்மு அபிராமிக்கு அவரது மாமாவை திருமணம் செய்ய அம்மு அபிராமியின் பெற்றோர் முடிவு செய்ய தான் சாண்டியை மனதார காதலிப்பதாக கூறி பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கி விடுகிறார் அம்மு அபிராமி. இதன் பின் சாண்டி மாஸ்டரின் பெற்றோரை பார்க்க செல்லும் அம்மு அபிராமிக்கு மிகப்பெரிய எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது.. அது அதிர்ச்சி என்ன? என்பதுதான் இரண்டாவது கதை.
மூன்றாவது கதையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சுபாஷும்,,, பத்திரிகையாளராக பணிபுரியும் ஜனனியும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். தன் நிறுவனத்தில் செய்யும் ஒரு தவறால் சுபாஷுக்கு வேலை பறி போகிறது.சில மாதங்கள் கடந்த நிலையில் வேலை எதுவும் கிடைக்காததால் சந்தர்ப்ப சூழ்நிலையால் புதிதாக அறிமுகமாகும் நபர் மூலம் ஆண் விபச்சார தொழில் செய்ய ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் ஜனனிக்கு இந்த விஷயம் தெரிய வர ஜனனி எடுத்த முடிவு என்ன ? என்பதே மூன்றாவது கதை.
நான்காவது கதையில் ஆட்டோ ஓட்டுநரான கலையரசன் ,,,, சோபியா தம்பதிகளுக்கு 8 வயதில் ஒரு பெண் பிள்ளையும் 6 வயதில் ஒரு ஆண் பிள்ளையும் என் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சியில் கலையரசனின் மகள் தனது நடிப்புத் திறமையின் மூலம் முன்னேறி வருகிறார். ஒரு கட்டத்தில் அச் சிறுமி இறந்து விட தன் மகள் இறப்புக்கு அவருடைய அம்மாதான் காரணம் என்று கலையரசன் கூறுகிறார். அதன் பிறகு நடந்தது என்ன? எனபதுதான் நான்காவது கதை
வெவ்வேறு விதமான நான்கு கதைகளை தயாரிப்பாளரிடம் சொல்லும் .இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் முடிவில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’ஹாட் ஸ்பாட்’
முதல் கதையில் நடித்திருக்கும் ஆதித்யா பாஸ்கர் – , கௌரி கிஷன் இரண்டாவது கதையில் நடிக்கும் சாண்டி – அம்மு அபிராமி, மூன்றாவது கதையில் வரும் சுபாஷ் – ஜனனி , நான்காவது கதையில் வரும் கலையரசன் - சோபியா என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் கதையுடன் இணைந்து மிக சிறப்பாக நடித்துள்ளனர்
இசையமைப்பாளர் சதீஷ் ரகுநந்தன் இசையும் ,கோகுல் பினாய் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !
அந்தாலஜி முறையில் நான்கு சிறு சிறு கதைகளை வைத்துக்கொண்டு ஒரு முழுநீள திரைப்படமாக ஒரு கதை மற்றோரு கதைக்கு சம்மந்தம் இல்லாமல் இருக்கும்படி திரைக்கதை அமைத்து படம் பார்க்கும் ரசிகர்கள் சிந்திக்கும்படி சமூகத்திற்கு மிக முக்கியமான ஒரு மெசேஜை சொல்வதுடன் அனைவரும் பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.
ரேட்டிங் ; 3 / 5
Comentários