top of page
mediatalks001

’கள்வன்’ – விமர்சனம்


சத்தியமங்கலம் அருகேயுள்ள மலை சார்ந்த கிராமத்தில் வாழ்ந்து வரும் ஜி வி பிரகாஷும் , தீனாவும் சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து திருடிய பணத்தில் குடித்து கும்மாளமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு நாள் இருவரும். பக்கத்து கிராமத்தில் திருட போகும்போது நாயகி இவானாவை சந்திக்கிறார் ஜி வி பிரகாஷ்.

இவானாவின் அழகில் மயங்கி கண்டதும் காதல் கொள்கிறார் ஜி வி பிரகாஷ். தன் காதலை வெளிப்படுத்தும் நேரத்தில் திருடனை எப்படி காதலிப்பது என கூறி ஜி வி பிரகாஷை, திட்டி அனுப்பி விடுகிறார் இவானா.

இந்நிலையில் முதியோர் இல்லத்தில் வேலைக்காக செல்லும் ஜீவி பிரகாஷ் வயதான பெரியவரான பாரதிராஜாவை சந்திக்கிறார்.

ஆதரவில்லாமல் அனாதையாக இருக்கும் பாரதிராஜாவை, அந்த முதியோர் இல்லத்திலிருந்து தத்தெடுத்து தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார் ஜீவி பிரகாஷ்.. பாரதிராஜாவை தன் வீட்டிற்கு அழைத்து வந்து தன் நண்பன் தீனாவுடன் இணைந்து அங்குள்ள காட்டு யானை மூலம் அவரை சாகடிப்பதற்கு திட்டம் போடுகிறார் .

முடிவில் ஜீவி பிரகாஷ் திட்டப்படி பாரதிராஜாவை காட்டு யானை மிதித்துக் கொன்றதா?

ஜி வி பிரகாஷ் – இவானா இருவரது காதல் கை கூடியதா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'கள்வன்'

கெம்பன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜி வி பிரகாஷ் அமைதியான முகத்தை வைத்து கொண்டு திருடன்,குடிகாரன்,பொறுப்பற்றவன் என பல பரிணாமங்களில் கதையுடன் இணைந்து குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் அசுர நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஜி வி பிரகாஷ்.

நாயகியாக நடித்திருக்கும் இவானா இயல்பான நடிப்பில் கதைக்கேற்றபடி நடிக்கிறார் .

ஒரு சர்க்கஸ் கம்பெனியின் முதலாளியாக வாழ்ந்து வயதான பின் ஆதரவற்ற நிலையில் ஒரு முதியோர் இல்லத்தில் பரிதாபமாக அறிமுகமாகும் பாரதிராஜா,,, ஜி.வி.பிரகாஷின் தாத்தாவாக தத்தெடுக்கப்பட்ட பின் அவர் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி சொல்லும்போது அனுபவ நடிப்பால் அனைவரது பாராட்டை பெறுகிறார் .

ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் தினா படத்திற்கு பக்க பலம்

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது..

கதையோடு இணைந்து பயணிக்கும் ரேவாவின் பின்னணி இசை.


பி.வி.சங்கர் ஒளிப்பதிவில் வனப்பகுதி,காடு, யானை மற்றும் இயற்கை சூழ்ந்த இடங்களை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்


காதல், காமெடி, துரோகம், செண்டிமெண்ட் என அனைத்தும் கொண்ட கதையை வைத்து ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக யானை விரட்டும் பிரமாண்டமான கிளைமாக்ஸ் காட்சியுடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பி.வி.சங்கர் .


ரேட்டிங் ; 3 / 5

Comments


bottom of page