top of page

'ஓயிட் ரோஸ்' - விமர்சனம்


சென்னையில் காதல் கணவர் மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் கயல் ஆனந்தி.

இந்நேரத்தில் ஒரு இரவில் கணவர் மற்றும் குழந்தையுடன் வண்டியில் வரும் பொழுது, பொது இடத்தில் பாகிஸ்தான் உளவாளியை என்கவுண்டரில் போலீசார் சுடும்போது தவறுதலாக கயல் ஆனந்தியின் கணவரை சுட்டு விட கயல் ஆனந்தியின் கண் முன்னே அவர் இறக்கிறார் .

கணவனை இழந்த கயல் ஆனந்தி பணத்திற்க்காக கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்த முடியாத சூழலில் . தன் குழந்தையை காப்பாற்ற பாலியல் தொழிலுக்கு செல்கிறார் .

மற்றொரு பக்கம் சைக்கோ கொலைகாரனான ஆர்கே சுரேஷ் பாலியல் தொழில் செய்யும் இளம் பெண்களை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசுகிறார்.

போலீசார் தேடும் சைக்கோ கொலையாளியான ஆர்.கே.சுரேஷிடம் எதிர்பாராத விதமாக சிக்கி கொள்கிறார் கயல் ஆனந்தி.

ஒரு கட்டத்தில் ஆர்.கே.சுரேஷை பற்றி தெரிந்து கொண்டு அதிர்ச்சியடையும் கயல் ஆனந்தி அவரிடம் இருந்து தப்பிக்க போலீசாரின் உதவியை கேட்க ,,,, அவர்களும் ஆனந்தியை காப்பாற்ற போராடுகின்றனர் .

முடிவில் சைக்கோ கொலையாளி ஆர்.கே.சுரேஷிடம் இருந்து கயல் ஆனந்தி தப்பித்தாரா?

என்ன காரணத்திற்காக ஆர்.கே.சுரேஷ் இளம் பெண்களை கொலை செய்கிறார் என்பதை சொல்லும் படம்தான் 'ஓயிட் ரோஸ்'


கதையின் நாயகியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கயல் ஆனந்தி உணர்வுபூர்வமான நடிப்பில் ஒரு குழந்தைக்கு தாயாக.. ஆர்.கே.சுரேஷிடம் சிக்கிக்கொண்டு தப்பிக்க போராடும்போது பதற்றமான பயம் கலந்த நடிப்பில் பாராட்டை பெறுகிறார் .

சைக்கோ கொலையாளியாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் வசனங்கள் குறைவாக இருந்தாலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் மிரட்டுகிறார் .

கயல் ஆனந்தியின் கணவராக நடித்திருக்கும் விஜித், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரூசோ ஸ்ரீதரன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சசி லயா, ரித்திகா சக்ரபோர்த்தி, ஹசின், தரணி ரெட்டி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .

ஒளிப்பதிவாளர் வி.இளையராஜாவின் ஒளிப்பதிவும் ,இசையமைப்பாளர் சுதர்சனின் இசையும் படத்திற்கு பக்க பலம் .


கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலையாளியின் கதையை வைத்து அவரிடம் சிக்கிக் கொள்ளும் ஒரு இளம்பெண் தப்பிக்க போராடுவதை மையப்படுத்தி அமைத்திருக்கும் திரைக்கதையுடன் ,,, காட்சிகளில் அதிகமாக கொலைகளை பற்றி விவரிக்காமல் க்ரைம் பட ரசிகர்கள் விரும்பும் சைக்கோ க்ரைம் திரில்லராக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கே.ராஜசேகர்.

ரேட்டிங் ; 3 / 5

bottom of page