சிறுவயதில் பெற்றோர்களுடன் காரில் செல்லும்போது கார் விபத்தாகி பெற்றோர்களை இழக்கும் நாயகன் தீரஜ்க்கு அந்த விபத்தினால் முகத்தில் தீக்காயங்கள் ஏற்படுகிறது.
வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பள்ளி பருவ காலத்தில் இருந்தே இவருடன் யாரும் நட்பாக பழக மறுக்கின்றனர் .
இளைஞரான பின் இவருடைய தோழியான நாயகி ஸ்மிருதி வெங்கட் நட்பாக பழகுகிறார்.
நாயகி ஸ்மிருதி வெங்கட்டை ஒருதலையாக காதலிக்கும் நாயகன் தீரஜ் தன் காதலை ஸ்மிருதி வெங்கட்டிடம் சொல்கிறார் ஆனால் ஸ்மிருதி வெங்கட் காதலை ஏற்க மறுக்கிறார்.
இதனால் நாயகன் தீரஜ் தற்கொலைக்கு முயற்சி செய்யும் போது ஸ்மிருதி வெங்கட்டிடம் இருந்து போன் வருகிறது .
ஸ்மிருதி வெங்கட் தன்னை தொடர்பு கொள்வதை பார்த்து சந்தோஷமடையும் தீரஜ் உயிரை காப்பாற்ற தப்பிக்கும் நேரத்தில்,,,, ஒருவர் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை, அவர் செய்யும் தீமைகள் மற்றும் நன்மைகளை கணக்கெடுத்து கடவுளிடம் ஒப்படைப்பதோடு, இறந்தவரின் உயிரையும் கடவுளிடம் ஒப்படைக்கும் பணியை இரண்டு தேவதைகள் செய்து வருகிறார்கள்.
லெஃப்ட் மற்றும் ரைட் என்ற அந்த இரண்டு தேவதைகள், நாயகன் தீரஜின் ஆயுள் முடிவதற்குள் தவறுதலாக அவரது உயிரை எடுத்து விட ,,இரு வானத்து தேவதைகளால் இவரது உயிர் பறிபோகிறது
85 வயது வரை வாழக்கூடிய தகுதி உடைய ஒருவரை தவறுதலாக உயிரைப் பறித்ததற்காக வருத்தமடையும் இரு தேவதைகள் மீண்டும் அவருடைய உடலுடன் உயிரை சேர்க்க முயற்சி செய்ய தீரஜ் உடல் காணாமல் போகிறது முடிவில் காணாமல் போன தீரஜ் உடல் கிடைத்ததா? இல்லையா ? என்பதை சொல்லும் படம் தான் ’டபுள் டக்கர்’
நாயகனாக நடித்திருக்கும் தீரஜ்ஜுக்கு இரண்டு வேடங்கள். இரண்டிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல்,காமெடி , ரொமான்ஸ் என அனைத்திலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
லெஃப்ட் மற்றும் ரைட் ஆகிய கணிணி வரைகலைக் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்து முடிவில் கதையுடன் பயணிக்கும் காளிவெங்கட் மற்றும் முனீஸ்காந்த் சிறப்பாக நடித்துள்ளனர் .
நாயகியாக நடித்திருக்கும் ஸ்மிருதிவெங்கட்டுக்கு படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் கதைக்கேற்றபடி சிறப்பாக நடித்துள்ளார் .
கருணாகரன், யாஷிகா ஆனந்த், சுனில் ரெட்டி , ஷாரா, எம்.எஸ்.பாஸ்கர், மன்சூர் அலிகான்,கோவை சரளா
நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
இசையமைப்பாளர் வித்யா சாகரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. கவுதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .
அறிமுக இயக்குநர் மீரா மஹதி, குழந்தைகள் கொண்டாடும் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் கதை -திரைக்கதை அமைத்து அதனுடன் அனிமேஷன் கதாபாத்திரங்களையும், நட்சத்திர நகைச்சுவை நடிகர்களையும் இணைத்து கதையில் பல திருப்பங்களுடன் எந்த லாஜிக்கையும் பார்க்காமல் ரசிகர்கள் சிரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஜாலியான காமெடி படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மீரா மஹதி
ரேட்டிங் ; 3 / 5
Comments