top of page

'டியர்' - பட விமர்சனம் ! அன்பான புரிதலை மன ரீதியான பிரச்சனைக்கு தீர்வாக சொல்லும் கதைக்களம்


தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் நாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார் அம்மா ரோகிணி மற்றும் காளி வெங்கட்டுடன் வாழ்ந்து வரும் நிலையில்,, பிரபலமான செய்தி சேனலில் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் ஈடுபடும் நேரத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாரை திருமணம் செய்து கொள்ள குடும்பத்தார் வற்புறுத்துகின்றனர் .

மற்றொரு பக்கம் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷை பெண் பார்க்க வரும் வரன்களிடம் தூக்கத்தில் குறட்டை விடும் பிரச்சனையை வெளிப்படையாக ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களிடம் சொல்லி விடுவதால் திருமணம் நடைபெறாமல் நாட்கள் செல்கிறது .

இந்நேரத்தில் பெற்றோர்கள் விருப்பப்படி ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும்,, ஐஸ்வர்யா ராஜேஷிக்கும் திருமணம் நடக்கிறது.

திருமணத்திற்கு முன் அம்மா கீதா கைலாசத்தின் வேண்டுகோளினால் தூக்கத்தில் குறட்டை விடும் பிரச்சனையை ஜி.வி.பிரகாஷ்குமாரிடம் சொல்லாமல் மறைக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் .

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு தூங்கும் போது சின்ன சத்தம் கேட்டால் கூட எழுந்து விடும் பிரச்சனை இருக்கிறது

திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷின் குறட்டையால் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் சரியான தூக்கம் இல்லாததால் வேலை நேரத்தில் வந்த திடீர் தூக்கத்தினால்  ஜி.வி.பிரகாஷ்குமாரின் வேலை பறி போகிறது.

இதனால் ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்து பிரிந்து வாழ குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். ஆனால் விவாகரத்து தர மறுத்து ஜி.வி.பிரகாஷ்குமாருடன் சேர்ந்து வாழ்வதற்கான தன் விருப்பத்தை நீதிபதியிடம் தெரிவிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

முடிவில் ஜி.வி.பிரகாஷ்குமார் தன் விருப்பப்படி ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்து விவாகரத்து பெற்றாரா?

இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷும் ,,,ஜி.வி.பிரகாஷ்குமாரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் 'டியர் '

கதையின் நாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் வழக்கமான பாணியில் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் தன் குறட்டை பிரச்சனையை தீர்க்க போராடும் போதும் ,,,கணவன் மீது உள்ள அன்பினால் விவாகரத்து வேண்டாம் என கெஞ்சும்போதும் உணர்வுப்பூர்வமான நடிப்பில் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அண்ணனாக வரும் காளி வெங்கட் அவரது மனைவியாக சிறப்பான நடிப்பில் பிளாக் ஷீப் நந்தினி,, ரோகிணி, தலைவாசல் விஜய், இளவரசு, கீதா கைலாசம், கமலேஷ் , அப்துல் லீ , மகாலக்ஷ்மி சுதர்ஷன் என நடித்த நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும்,, ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவும்,, படத்திற்கு பக்க பலம் .


சில குடும்பங்களில் கணவன் மனைவி இருவருக்கும் உள்ள பிரச்சனையான குறட்டை சத்தத்தை மையமாக கொண்ட கதையுடன் திரைக்கதையில் இருவருக்குமான அன்பான புரிதலை தீர்வாக சொல்வதுடன் ,, கதையின் அழகியலோடு காட்சிகளில் இயல்பாக அனைவரும் ரசிக்கும்படி

படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன்.


மன ரீதியான பிரச்சனைக்கு அன்பான புரிதலை தீர்வாக சொல்லும் கதைக்களம் .


ரேட்டிங் ; 3.5 / 5


bottom of page