top of page

‘ரோமியோ' - விமர்சனம் !




இளவரசுவின் மகனான விஜய் ஆண்டனி திருமணம் செய்து கொண்டால் தன் மனது காதலிக்கும் பெண்ணைதான் திருமணம் செய்து கொள்வேன் என வைராக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் சினிமாவில் நாயகியாக நடிக்க முயற்சி செய்து வரும் தலை வாசல் விஜய்யின் மகளான நாயகி மிருணாளினி ரவி தன் தாத்தா மறைவு செய்தி கேட்டு தென்காசிக்கு வருகிறார்.

இநேரத்தில் தலை வாசல் விஜய்யின் குடும்ப உறவினரான இளவரசுவும் விஜய் ஆண்டனியுடன் தென்காசிக்கு வருகிறார்.

துக்க வீட்டில் நாயகி மிருணாளினி ரவியை விஜய் ஆண்டனி பார்த்ததும் மனதில் காதல் மலர்கிறது.

பெரியவர்களின் சம்மதத்துடன் மிருணாளினி ரவியை விஜய் ஆண்டனி திருமணம் செய்து கொள்கிறார் .ஆனால், விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துகொள்ளும் மிருணாளினி ரவி சினிமாவில் நாயகியாக வேண்டும் என்பது தான் லட்சியம் ,,, திருமண வாழ்க்கையே வேண்டாம் என தனது லட்சியத்தை நோக்கி மிருணாளினி ரவி அதற்கான முயற்சியில் ஈடுபட ,,, மிருணாளினி ரவி மீது கோபப்படாமல் அவரை ஒருதலையாக விஜய் ஆண்டனி காதலிக்கிறார்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் நாயகியாக வேண்டும் என்கிற மிருணாளினி ரவியின் கனவை நிறைவேற்ற சொந்தமாக பட கம்பெனி ஆரம்பித்து மிருணாளினி ரவி கதையின் நாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நாயகனாக விஜய் ஆண்டனி நடிக்கிறார்.

முடிவில் மிருணாளினி ரவி தன் லட்சியபடி சினிமாவில் நாயகியாக வெற்றி பெற்றாரா ?

விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட விஜய் ஆண்டனியோடு விருப்பத்துடன் மிருணாளினி ரவி இணைந்து வாழ்ந்தாரா ? என்பதை சொல்லும் படம்தான் தான் ‘ரோமியோ’.

அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி ஒரு தலையாக மனைவியை காதலிக்கும் காதல் நாயகனாக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல், நடனம் , ரொமான்ஸ் மற்றும் எமோஷனல், காமெடி என அனைத்திலும் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

நாயகியாக நடித்திருக்கும் மிருணாளினி ரவி கதைக்கேற்றபடி பாராட்டும்படியான நடிப்பில் இயல்பாக நடித்துள்ளார் .

விஜய் ஆண்டனியின் காதலுக்கு உதவும் யோகி பாபு ,,நாயகியின் நண்பனாக நடித்திருக்கும் ஷாரா ,,விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி என நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

இசையமைப்பாளர் பரத் தனசேகர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதைக்கு பக்க பலம்

பருக் ஜே பாஷாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .


திருமணம் செய்து கொண்டு தன் காதல் மனைவியை ஒரு தலையாய் காதலிக்கும் நாயகனின் காதல் கதையை வைத்து இயல்பான திரைக்கதை அமைப்பில் பெண்களின் கனவான லட்சியங்கள் திருமண பந்தத்தில் முடியாமல் அவர்களின் கனவு தொடர வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லி படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் .



ரேட்டிங் ; 3 / 5

bottom of page