பணத்திற்காக வில்லங்கமான வேலைகளில் ஈடுபடும் ஆறு பேர் ஆரம்பத்தில் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் இருந்தாலும் பணம் இவர்களுக்கான தொடர்பை ஏற்படுத்துகிறது.
இவர்களுக்கு சம்பந்தப்பட்ட முக்கிய கதையாக கால் டாக்ஸி ஒட்டி குடும்பத்தை காப்பாற்றி வரும் சுவாதி மீனாட்சியின் தந்தை அருள் டி. சங்கர் ஏடிஎம் காவலாளியாக வேலை பார்க்கிறார் .
அருள் டி. சங்கரின் இளைய மகள் தன் காதலனுடன் ஓடிவிட, சில மாதங்கள் கடந்த நிலையில் ஓடிப்போன இளைய மகள் கர்ப்பிணியாக தன் கணவருடன் அருள் டி. சங்கர் வீட்டிற்கு வருகிறார்.
இளைய மகளுக்கு தந்தைக்குரிய கடமையை செய்ய வளைகாப்பு மற்றும் பிரசவ செலவிற்காக பைனான்சியர் ஒருவரிடத்தில் வட்டிக்கு பணம் வாங்குகிறார்.
அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு வண்டியில் வீட்டிற்கு வரும்போது எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்படுகிறது.
இவர் வட்டிக்கு வாங்கி வந்த 2 லட்ச ரூபாய் விபத்தில் காணாமல் போகிறது.
இந்நிலையில் சுவாதி மீனாட்சி அவரது தந்தை எடுத்து வந்த 2 லட்சம் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.
சுவாதி மீனாட்சியின் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
சுவாதி மீனாட்சி தந்தையின் உயிரை காப்பாற்ற பணத்திற்காக போராடுகிறார் .
முடிவில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களாக வருபவர்கள் அடுத்தவனை ஏமாற்றி அவர்கள் கொள்ளையடித்த பணம் இறுதியில் யாருக்கு கிடைத்தது ?
அவர்களின் நிலை என்ன ? தந்தையின் உயிரை காப்பாற்ற பணத்திற்காக போராடும் சுவாதி மீனாட்சிக்கு எதிர்பார்த்த பணம் கிடைத்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’வல்லவன் வகுத்ததடா’
தே ஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் என அனைவரும் கதையின் முக்கிய கதாபாத்திரங்களாக சிறப்பான நடிப்பில் பாராட்டை பெறுகின்றனர் .
காவல்துறை அதிகாரியாக நடிக்கும் நடிகர் ராஜேஷ் பாலச்சந்திரனின் ஒரு விலங்கின் சிரிப்பு படம் பார்க்கும் ரசிகர்களையும் சிரிக்க வைக்கிறது ..
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சரண் தேஜ்ராஜ் மற்றும் அவரது நண்பராக நடித்திருக்கும் ரெஜின் ரோஸ் இயல்பான நடிப்பில் நடிக்கின்றனர் .
இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து கதை ஓட்டத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளது.
பணமே பிரதானம் என நினைக்கும் ஆறு கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் கதையை வைத்து தெளிவான விறு விறுப்பான திரைக்கதையுடன் ஒவ்வொருவரது செயல்பாட்டினால் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை சுவராஸ்யமாக சொல்லி “நல்லது செய்தால் எப்பொழுதும் நல்லதே நடக்கும்” என்கிற ஆழமான கருத்துடன் அனைவரும் ரசிக்கும்படி படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் இயக்குனர் விநாயக் துரை.
ரேட்டிங் ; 3.5 / 5
பணம் பத்தும் செய்யும்
Comments