top of page

’ஃபைண்டர்’ – விமர்சனம்


மீனவரான சார்லி கடலில் மீன்பிடித் தொழிலைச் செய்து மனைவி மகளுடன் கிடைக்கும் வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சார்லி ஏரியா மக்களிடம் சீட்டுப் பணம் வாங்கி சீட்டு நடத்தி வருகிறார்.

ஒருகட்டத்தில் சீட்டு பணத்தை வாங்கியவர் சார்லியை ஏமாற்றி விட்டு ஓடி விடுகிறார்.

இதனால் பணத்தை கட்டியவர்கள் பணத்தை திருப்பி கேட்கின்றனர் .

இக் கட்டான நிலையில் பணத்தை திரட்டவேறு வழி தெரியாமல் நிற்கும் சார்லிக்கு உறவினர் செண்ட்ராயன், மூலம் செய்யாத குற்றத்திற்காக ஜெயிலுக்கு செல்கிறார்.

சில மாதங்களில் வெளியே வந்து விடலாம் என்று ஜெயிலுக்கு செல்லும் சார்லிக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் நாயகன் வினோத் ராஜேந்திரன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘ஃபைண்டர்’ என்ற துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் . அந்நிறுவனம் மூலம், குற்றம் செய்யாமல் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிரபராதிகளான அப்பாவிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் அவரிடம் செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சார்லியின் வழக்கு வருகிறது.

இதனையடுத்து சார்லியின் வழக்கை கையில் எடுக்கும் நாயகன் வினோத் ராஜேந்திரன்,,,,

முடிவில் நிரபராதியான சார்லியை காப்பாற்றினாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’ஃபைண்டர்’

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சார்லி, படத்தின் கதைக்கு பலமாக தனது நடிப்பின் மூலம் பணத்திற்காக செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் அவர்,,,, தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து கலங்கும் இடங்களில் உணர்வுபூர்வமாக அனுபவ நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .


துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வருபவராக நடிக்கும் நாயகன் வினோத் ராஜேந்திரன் இயல்பான நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார். அவரது உதவியாளராக வரும் தாரணியும் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் செண்ட்ராயனுக்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்..

நிழல்கள் ரவி சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும் நடிப்பில் கதையுடன் இணைந்து பயணிக்கிறார் .

மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் புதியவர்கள் என்றாலும் சிறப்பாக நடிக்கின்றனர் .

சூர்ய பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

பிராசந்த் வெள்ளிங்கிரியின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு பக்க பலமாக இருக்கிறது .


உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையுடன் க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படாமல் காப்பாற்ற பட வேண்டும் என்கிற அழுத்தமான கருத்துடன் படத்தை அனைவரும் பாராட்டும்படி உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வினோத் ராஜேந்திரன்.


ரேட்டிங் ; 3 . 5 / 5

댓글


bottom of page