top of page

'ஒரு நொடி' - விமர்சனம் ! ஒரு நொடியில் நடக்கும் அதிர்ச்சியான சம்பவம்தான் கதையின் முக்கிய திருப்பம்




மதுரை அலங்காநல்லூரில் யாருக்கும் பயப்படாத தைரியமான போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை செய்கிறார் நாயகன் தமன் குமார் .

இந்நிலையில் காணாமல் போன தனது கணவர் எம்.எஸ்.பாஸ்கரை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகார் அளிக்கும் ஸ்ரீ ரஞ்சனி அரசியல்வாதியான எம் எல் ஏ பழ கருப்பையாவின் ஆதரவில் கந்து வட்டி தொழில் செய்யும் வேல ராமமூர்த்தி மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக சொல்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கரின் வழக்கை விசாரிக்க தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரான தமன் குமார் வேல ராமமூர்த்தியையும் அவரது ஆட்களையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைக்கிறார் .

மற்றொரு பக்கம் தீபா சங்கரின் மகளான இளம் பெண் நிகிதா மர்ம நபரால் கொல்லப்பட்டு ஒரு புதரில் பிணமாக கிடக்கிறார் .

இவ்விரு வழக்கையும் விசாரிக்கும் இன்ஸ்பெக்டரான தமன் குமார் காணாமல் போன எம்.எஸ்.பாஸ்கரை அவரது மனைவியிடம் ஒப்படைத்தாரா ?

தீபா சங்கரின் மகளான இளம் பெண் நிகிதாவை கொன்ற கொலையாளியை தமன் குமார் கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'ஒரு நொடி'

கம்பீரமான போலீஸ் அதிகாரியாக பரிதி இளம்மாறன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக,,,, கதையுடன் இணைந்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்தமன் குமார்.

ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் வழக்குகளை விசாரிக்கும் காட்சிகளிலும் , அதிரடி நாயகனாக ஆக்க்ஷன் காட்சிகளிலும் திறமையான நடிகராக முத்திரை பதிக்கிறார் .

கந்து வட்டி தொழிலில் மிரட்டும் வேல ராமமூர்த்தி,எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் பழ.கருப்பையா,சேகரன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனி

நிகிதாவின் தந்தை மற்றும் அம்மாவாக நடித்திருக்கும் தீபா சங்கர் , கதையின் முக்கிய திருப்புமுனையாக வரும் சலூன் கடைக்காரராக நடித்திருக்கும் விக்னேஷ் ஆதித்யா, கருப்பு நம்பியார் , அருண் கார்த்திக் ,கஜராஜ் என நடித்தவர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்

ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவும் ,சிவசங்கர், ஜெகன் கவிராஜ், உதயா அன்பழகன் ஆகியோரது பாடல் வரிகளில் சஞ்சய் மாணிக்கத்தின் இசையும் படத்திற்கு பக்க பலம் .

காணாமல் போன ஒருவரை பற்றி விசாரிப்பதுடன் , இளம்பெண் கொலையான வழக்கை புலனாய்வு செய்யும் , போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த வழக்கில் அவர் எதிர்கொள்ளும் சம்பவங்களை பல திருப்பங்களோடு சொல்வதுடன் யாரும் யூகிக்க முடியாத திருப்புமுனையான படத்தின் முடிவுடன் சுவாரஸ்யமான க்ரைம் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் கதையாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பி.மணிவர்மன்.


ரேட்டிங் ; 3.5 / 5


ஒரு நொடியில் நடக்கும் அதிர்ச்சியான சம்பவம்தான் கதையின் முக்கிய திருப்பம்

bottom of page