top of page

'ரத்னம்' - விமர்சனம் !


வேலூர் மாவட்டத்தில் சமுத்திரகனியின் ஆதரவில் அவரது நிழலாக வளர்கிறார் நாயகன் விஷால்.

அரசியல்வாதியான எம் எல் ஏ சமுத்திரகனி ஒருவரை கட்டம் கட்டினால் அவரை கொலை செய்வதையும், சமுத்திரகனி நடத்தும் மது பாரை பார்த்து கொள்வதையும் முழு நேர வேலையாக செய்து வருகிறார் விஷால். இந்நிலையில் வேலூருக்கு மருத்துவ படிப்பிற்கான தேர்வு எழுத வரும் பிரியா பவானி சங்கரை பார்த்தவுடன் அவர் பின்னாலே தன் சகாக்களுடன் செல்கிறார்.

இந்நேரத்தில் தேர்வு எழுத செல்லும் பிரியா பவானி சங்கரை ஒரு கொலைகார கும்பல் தாக்க வருகிறது. அந்த கும்பலிடம் இருந்து அவரை விஷால் காப்பாற்றுகிறார்.

அதனை தொடர்ந்து பிரியா பவானி சங்கரை அந்த கும்பல் கொலை செய்ய முயற்சி செய்கிறது .

முடிவில் பிரியா பவானி சங்கரை அந்த மர்ம கும்பல் கொலை செய்ய காரணம் என்ன?

பிரியா பவானி சங்கரை விஷால் பாதுகாக்க காரணம் என்ன? என்பதை சொல்லும் படம்தான் 'ரத்னம்'

கதையின் நாயகனாக நடிக்கும் விஷால் அம்மா செண்டிமெண்ட், பாசம் என உணர்வுபூர்வமான காட்சிகளிலும், அதிரடி நாயகனாக ஆக்‌ஷன் காட்சிகளிலும் கதையுடன் பயணித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் இயல்பான நடிப்பில் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டை பெறுகிறார் .

வேலூர் தொகுதி எம் எல் ஏ வாக சமுத்திரக்கனி ,சில காட்சிகளில் மட்டும் சிரிக்க வைக்கும் யோகி பாபு ,கடவுள் ராஜேந்திரன், விடிவி கணேஷ், இவர்களுடன் மிரட்டும் வில்லன்களாக முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார் , விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், துளசி, கஜராஜ், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், ஒய்.ஜி.மகேந்திரன், கணேஷ் வெங்கட்ராமன், கும்கி அஸ்வின் என நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர் .

இயக்குனரின் வேகத்திற்கு இணையாக ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு,,,

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அசத்தல் !

படத்தின் மற்றொரு பக்க பலம் ஸ்டண்ட் இயக்குநர் கனல் கண்ணன் .

வழக்கமான காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த கதையுடன் இந்த முறை திரைக்கதையில் அம்மா - மகன் பாச செண்டிமெண்டை சேர்த்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் மாஸ் ஆக்க்ஷன் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி


ரேட்டிங் ; 3. / 5


bottom of page