குஸ்தி பயிற்சியாளராக இருக்கும் எம் எஸ் பாஸ்கருக்கு இரண்டு மகள்களில் மூத்த மகளான வெண்பாவிற்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு சில காரணங்களால் திருமணம் நடைபெறாமல் போகிறது . நிச்சயம் செய்த மாப்பிள்ளையான கபாலி விஸ்வந்த் தான் வேண்டும் என்றும் வெண்பா பிடிவாதம் செய்ய,,,, விஸ்வந்தை வேண்டாம் என எம் எஸ் பாஸ்கர் உறுதியான முடிவுடன் இருக்கிறார்.
இதற்கிடையில், எம் எஸ் பாஸ்கரின் இரண்டாவது மகள் பிரியதர்ஷினி மருத்துவ படிப்பு படித்துக்கொண்டு இருக்கிறார்.
நீட் தேர்விற்காக படிக்கச் சென்ற தனியார் பயிற்சி மையத்தில் தேர்வில் வெற்றி பெற பத்து லட்சம் கேட்பதாக அக்கா வெண்பாவிடம் போனில் கூறுகிறார் பிரியதர்ஷினி.
அன்றைய தினமே பிரியதர்ஷினி காணாமல் போகிறார் . தனது தங்கையை காணவில்லையென வெண்பாவும் தனது மகளை காணவில்லையென எம் எஸ் பாஸ்கரும் கதறுகின்றனர் .
பிரியதர்ஷினியை கண்டுபிடித்து தருமாறு வெண்பாவும் எம் எஸ் பாஸ்கரும் போலீசில் புகாரளிக்க
போலீசார் வழக்கை எடுத்து விசாரிக்க ஆரம்பிக்கின்றனர்.
மற்றொரு பக்கம் விஸ்வந்தும் பிரியதர்ஷினியை தேடுகிறார். முடிவில் காணாமல் போன மகளை எம் எஸ் பாஸ்கர் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’அக்கரன்’
கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம் எஸ் பாஸ்கர் உணர்வுபூர்வமாக அனுபவ நடிப்பில் குணசித்திர நடிகராக படத்தின் முடிவில் அதிரடி ஆக்க்ஷன் நடிகராக அசத்துகிறார் .
நாயகியாக நடிக்கும் வெண்பா இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் .
கதையின் பக்க பலமாய் தங்கையாக நடிக்கும் பிரியதர்ஷினி
அமைச்சராக வரும் நமோ நாராயணன் வில்லன்களாக வரும் ஆகாஷ் பிரேம்குமார் , கார்த்திக் சந்திரசேகர் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.ஏ.ஆனந்தின் ஒளிப்பதிவும் , இசையமைப்பாளர் எஸ.ஆர்.ஹரியின் இசையும் படத்திற்கு பக்க பலம் .
அனைவரும் ரசிக்கும் அப்பா – மகளுக்கான பாசமான கதையுடன் அரசியல்,,, நீட் பயிற்சி மையங்களில் நடக்கும் மோசடிகளை திரைக்கதையில் தோலுரிப்பதுடன் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அருண் கே.பிரசாத்.
ரேட்டிங் - 3 / 5
Comments