'குரங்கு பெடல்' - விமர்சனம் கிராமத்து சிறுவர்களின் இயல்பான வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக சொல்லும் படம்
- mediatalks001
- May 3, 2024
- 1 min read
1980ம் ஆண்டில் கோடை விடுமுறையை கொண்டாட நினைக்கும் பள்ளி சிறுவர்கள் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
சொந்த சைக்கிள் இல்லாததால் வாடகை சைக்கிள் எடுத்து கற்றுக் கொள்ள முயற்சி செய்கின்றனர் .
இந்நேரத்தில் சைக்கிள் ஓட்ட தெரியாத,,,, எங்கு சென்றாலும் நடந்தே செல்லும் காளி வெங்கட், தனது மகனின் சைக்கிள் ஆசையை புரிந்துக்கொள்ளாமல் வாடகைக்கு சைக்கிள் எடுக்க காசு கொடுக்க மறுக்கிறார்.
ஆனால், எப்படியாவது சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவரது மகன் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன்
நண்பனில் ஒருவன் சொந்தமாக சைக்கிள் வாங்கி ஒட்ட,,, அவனுடன் மற்ற நண்பர்களும் சென்று விட,,,,, மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன் மட்டும் வாடகைக்கு சைக்கிள் எடுத்து தன்னந்தனியாக இரண்டு பெடல்களின் நடுவே காலை வைத்து ஒட்டும் குரங்கு பெடல் மிதித்து ஒட்ட கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறான் .
முடிவில் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதை இயல்பான கதையுடன் உணர்வுப்பூர்வமாக சொல்லும் படம்தான் 'குரங்கு பெடல்'
கந்தசாமி என்ற கிராமத்து மனிதராக நடிப்பில் வாழ்ந்திருக்கும் நடிகர் காளி வெங்கட்,,,, சைக்கிள் ஓட்ட தெரியாததால் தன்னை நடராஜா சர்வீஸ் என்று கிராம மக்கள் கேலியுடன் கிண்டல் செய்வதை மன வலியுடன் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் காட்சிகளிலும் தனது நிலையை மகனிடம் பேசும் காட்சியிலும் அனுபவ நடிகராக இயல்பான நடிப்பில் அசத்துகிறார் .
முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் சிறுவர்கள் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், மாஸ்டர் ராகவன், மாஸ்டர் ஞானசேகர், மாஸ்டர் சாய் கணேஷ், மாஸ்டர் அதிஷ் ஆகியோர் கிராமத்து சிறுவர்களாக எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் ஜென்சன் திவாகர் கொங்கு தமிழில் பேசி காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர் .
சிறுவனின் அக்காவாக நடித்த தக்ஷனா, அம்மாவாக நடித்த சாவித்திரி, வாத்தியார் வேடத்தில் நடித்த செல்லப்பா, தோல் பாவை கலைஞராக நடித்த குபேரன் என அனைவரும் கொங்கு மாவட்ட கிராமத்து மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
ஜிப்ரானின் இசையும் , ஒளிப்பதிவாளர் சுமீ பாஸ்கரனின் ஒளிப்பதிவும் கதையின் வேகத்திற்கு பக்க பலம் .
எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பனின் ‘சைக்கிள்’ சிறுகதையை மையமாக கொண்டு கிராமத்து சிறுவர்களின் வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக சொல்லும் கதையுடன் அப்பா - மகன் இடையிலான பாசப் போராட்ட திரைக்கதையுடன் கிராமத்து வாழ்வியலை அழகாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இயல்பான கிராம மக்களின் வாழ்க்கை சூழலை கதையுடன் இணைந்து பயணிக்கும்படியான காட்சிகளோடு அனைவரும் பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கமலக்கண்ணன்.
கிராமத்து சிறுவர்களின் இயல்பான வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக சொல்லும் படம்
ரேட்டிங் - 3. 5 / 5
Comentários