காதலித்து திருமணம் செய்து கொண்ட கணேஷ் வெங்கட்ராமனின் நடத்தை சரியில்லாததால் அவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பெண் குழந்தையுடன் மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு வேலை தேடி வருகிறார் வரலட்சுமி சரத்குமார்,
மகளுடன் தனிமையில் வாழும் வரலட்சுமி சரத்குமார் எல்லாமே தன் மகள்தான் என இருக்கும்போது அவரிடம் இருந்து குழந்தையை பிரிக்க அவரது முன்னாள் கணவர் கணேஷ் வெங்கட்ராமன் முயற்சி செய்கிறார் .
இதற்கிடையே மன நல காப்பகத்தில் இருந்து தப்பித்த கொலை குற்றவாளியான மைம் கோபி, வரலட்சுமியின் மகள் தன்னுடைய குழந்தை என்று சொந்தம் கொண்டாடுவதோடு, சிறுமியை கடத்தி வைத்துக்கொண்டு வரலட்சுமி சரத்குமாரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகிறார் .
பணத்திற்க்காக போராடும் வரலட்சுமி சரத்குமார் முன்னாள் கணவர் கணேஷ் வெங்கட்ராமனிடம் ஒரு கோடி ரூபாய் பணத்தை கேட்கிறார் .
முடிவில் குழந்தையை மீட்க கணேஷ் வெங்கட்ராமன் தன் முன்னாள் மனைவியான வரலட்சுமி சரத்குமாரிடம் ஒரு கோடி ரூபாய் பணத்தை கொடுத்தாரா ? வரலட்சுமி சரத்குமாரிடம் குழந்தையை சொந்தம் கொண்டாடும் மைம் கோபி யார் ? தனது மகளை மீட்க போராடும் வரலட்சுமி சரத்குமார் எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன? அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் 'சபரி'
கதையின் நாயகியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்ட பெண்ணாகவும்,, ஆபத்திலிருந்து தன் குழந்தையை காப்பாற்ற போராடும்போது அதிரடி ஆக்ஷன் நாயகியாகவும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
வரலட்சுமியின் மகளாக நடித்திருக்கும் பேபி நிவேக்ஷா,மிரட்டலாக வரும் மைக் கோபி,வரலட்சுமியின் கணவராக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமன், வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கும் ஷசாங் என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
ஒளிப்பதிவாளர்கள் ராகுல் ஸ்ரீவட்சவ் மற்றும் கோபி சுந்தரின் இசையும் படத்திற்கு பக்க பலம்
தன் மகள்தான் வாழ்க்கை என நினைத்து வாழும் ஒரு தாயின் பாசப் போராட்டத்தை மையமாக கொண்ட கதையுடன் சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அனில் கட்ஸ்
ரேட்டிங் 3 / 5
Comments