இயற்கை வளமான கொடைக்கானலில் போகர் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார் சித்த மருத்துவத்துடன் வர்ம கலை தெரிந்த நாயகன் அர்ஜுன் தாஸ்.
தன் வாழ்க்கையில் நடந்த துயரமான சம்பவங்களை மறந்து அமைதியான சூழ்நிலையில் வாழ வேண்டும் என்பதற்காக கிராம மக்களுக்கு சித்த மருத்துவம் பார்த்துக்கொண்டு புழு பூச்சிக்கு கூட தீங்கிழைக்காமல் கொடைக்கானலில் வாழ்கிறார் அர்ஜுன்தாஸ்.
இந்நேரத்தில் அவர் இருக்கும் இடத்தின் அருகில் தங்கும் விடுதி ஒன்றில் மேலாளராக வேலை செய்யும் நாயகி தன்யா ரவிச்சந்திரனும், அர்ஜுன் தாஸும் ஆரம்பத்தில் நண்பர்களாக,,,,, பின்னர் இருவரும் காதலராகின்றனர்
இதற்கிடையே கொடைக்கானலுக்கு பணி மாற்றம் பெற்று வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் சங்கர், அர்ஜுன் தாஸை கண்டதும் கோபடமடைவதோடு அவரை அமைதியாக வாழ விடாமல் பல தொல்லைகளை கொடுக்கிறார் .
இன்ஸ்பெக்டர் சுஜித் சங்கர் கொடுக்கும் பிரச்சனைகளை பார்த்து புரியாமல் குழம்பும் அர்ஜுன் தாஸ் அவர் என்ன பிரச்சனை செய்தாலும் அதற்கு அமைதியாக ஒதுங்கி செல்ல ஒரு கட்டத்தில் சுஜித் சங்கர் வெறி தனமாக கொலை வெறியுடன் அவரை தாக்க முயற்சிக்கிறார் .
முடிவில் சுஜித் சங்கரின் கொலை வெறி தாக்குதலிருந்து அர்ஜுன் தாஸ் தப்பித்தாரா ?
சுஜித் சங்கருக்கும் அர்ஜுன்தாஸூக்கும் இடையே இருக்கும் பிரச்சனை என்ன ?
அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸ் கடந்த கால வாழ்க்கையில் நடந்த துயரமான சம்பவம் என்ன ? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்தான் 'ரசவாதி'
கதையின் நாயகனாக நடிக்கும் அர்ஜுன் தாஸ் காதல் நாயகனாகவும் ,,, ஆக்க்ஷன் காட்சிகளில் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான அதிரடி நாயகனாகவும் இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் கதைக்கேற்றபடி நடித்துள்ளார் .
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ரேஷ்மா வெங்கடேஷ் பரதநாட்டிய நடனத்தில் தொடங்கி ,,, தோல்வியான காதலினால் தன் கணவனிடம் சித்திரவதைகளை அனுபவிக்கும்போது உணர்வுபூர்வமான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
இன்ஸ்பெக்டராக சைக்கோ வில்லனாக ரசிகர்களையே மிரள வைக்கும் சுஜித் சங்கர் தமிழ் திரைக்கு புதிய அறிமுகமாக பாராட்டும்படியான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .
ஜி.எம்.சுந்தர், ரம்யா சுப்ரமணியன், ரிஷிகாந்த் இவர்களுடன் நடித்த மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர் .
தமன்.எஸ்-ன் இசையும் , ஒளிப்பதிவாளர் சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
சித்த மருத்துவராக காதலில் தோல்வியடைந்து வாழும் நாயகன் வாழ்க்கையில் புதியதாய் மலரும் காதலுடன் அவன் எதிர்நோக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட கதையுடன் தனக்குரிய பாணியில் இயற்கையை நேசிக்கும் வசனங்களுடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சாந்தகுமார் .
ரேட்டிங் - 3 / 5
コメント