எம் .ஜி .ஆரின் தீவிர ரசிகரான கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர்,,, அரசியல்வாதியான ஆனந்தராஜின் மகளான நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் அவரது அழகில் மயங்கி அவர் மீது காதல் கொள்கிறார்.
சாந்தினி ஸ்ரீதரனை காதலிப்பதற்காகவே அரசியல் களத்தில் இறங்கி வார்டு கவுன்சிலராக வெற்றி பெறும் அமீரின் காதலை சாந்தினி ஸ்ரீதரனும் ஏற்று கொண்டு இருவரும் காதலர்களாகின்றனர் .
சில நாட்களுக்கு பின் அமீரை மாவட்ட செயலாளராக கட்சி மேலிடம் நியமிக்கிறது .
மற்றொரு பக்கம் அமீரை ,,சாந்தினி ஸ்ரீதரன் காதலிப்பதை தெரிந்து கொண்ட ஆனந்தராஜ் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ,,, அமீருக்கும், ஆனந்தராஜுக்கும் இடையே பகை உண்டாகிறது
இந்நேரத்தில் அதிகாலை வேளையில் ஆனந்தராஜ் நடை பயிற்சி செல்லும்போது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட அந்த கொலை பழி அமீரின் மீது விழுகிறது.
சாந்தினி ஸ்ரீதரனும் ஆனந்தராஜை கொலை செய்தது அமீர் தான் என்று நம்புகிறார். உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தான் கொலையாளி இல்லை என நிரூபிக்க கட்சி மேலிடம் வழங்கிய இடைத்தேர்தல் வாய்ப்பை ஆரம்பத்தில் அமீர் நிராகரிக்கிறார்.
ஆனால், அமீர் தான் உண்மையான குற்றவாளி என்பதை நிரூபிப்பதற்காக, ஆனந்தராஜின் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுக்காட்டுகிறேன் என்று சாந்தினி ஸ்ரீதரன் அமீரிடம் சபதம் செய்ய,, ,
திடீர் என வேட்பாளராக களம் இறங்கும் அமீர் தன்னை நிரபராதி என்று நிரூபித்து இடைத்தேர்தலில் நான் வெற்றி பெற்றால் நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சாந்தினி ஸ்ரீதரனிடம் எதிர் சவால் விடுக்க ,,,,,
முடிவில் நடைபெற போகும் இடை தேர்தலில் அமீர் வெற்றி பெற்று தன் காதலியான சாந்தினி ஸ்ரீதரனுடன் இணைந்து வாழ்ந்தாரா ? இல்லையா என்பதை சொல்லும் படம்தான் ‘உயிர் தமிழுக்கு’
எம்.ஜி.ஆர் ரசிகனாக நாயகனாக நடித்திருக்கும் அமீர் அரசியல் களம் ,,,காதல் களம் என தனக்குரிய பாணியில் இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை அழகான சாந்தினி ஸ்ரீதரன் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பில் ஜொலிக்கிறார் .
ஆனந்த ராஜ், இமான் அண்ணாச்சி, ராஜ் கபூர், மாரிமுத்து, சரவண சக்தி, கஞ்சா கருப்பு என நடித்தவர்களின் நடிப்பு சிறப்பு
வித்யாசாகரின் இசையில் பாடல்களும் , பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் .
ஒளிப்பதிவாளர் தேவராஜின் ஒளிப்பதிவு தரம் !
காதல்,, நகைச்சுவை கலந்த அரசியல் கதையுடன் ரசிகர்கள் சிரிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் காமெடியுடன் வேகமாய் பயணிக்கும் திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ஆதம் பாவா .
ரேட்டிங் - 3 / 5
Kommentare